திரையரங்குகளுக்கு மக்களை வரவழைக்க யோசனை வழங்கும் பிரபல இயக்குநர்
கண்ணே கலைமானே’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் சீனு ராமசாமி தற்போது ‘மாமனிதன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், பாதி விலைக்கு பாப்கார்ன், இலவச பார்க்கிங் என சிறிய பட்ஜெட், புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு சலுகைகள் அறிவித்தால் அது பெரும்பாலான மக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும். நல்ல ஆரம்ப வசூல் கிடைக்கும். நல்ல சினிமாவும், நல்ல திறமைகளும் வளர இது உதவியாக இருக்கும். இன்றைய நாளில் எனது விருப்பம் இது” என்று பதிவிட்டுள்ளார்.
Ticket buy 1 get 1 free + popcorn for 1/2 rate + free parking charges (combo) for small budget new faces movies, will attract people crowd to theatres will get good opening.This will also enable growth of good cinema and new talents.its my wish on this day.
— Seenu Ramasamy (@seenuramasamy) October 13, 2019











