தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார் – விஜய்

தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த தளபதி விஜய் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார். நடிகர் விஜய் வரும் போது கடும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. போலீசார் சிரமபட்டு விஜயை பாதுகாப்புடன் வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.