தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விடுத்த #Green India Challenge செய்து முடித்த தளபதி விஜய்.
நல்ல விஷயத்தை பிரபலமாக்க பல பிரபலங்கள் தங்களுக்குள் மாறி மாறி ஒருவரை டேக் செய்து சவால்விடுவது வழக்கமாகிவிட்டது.
வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, யோகா செய்வது உள்ளிட்டவற்றை செய்து அந்த வீடியோவாக எடுத்து இணையத்தளத்தில் பதிவிடுவீர்கள்.
பின்னர் தனது நண்பர்கள் & மற்றும் சக நடிகருக்கு சவால் விடுவார்கள்.
இதனையடுத்து மற்ற நடிகர்கள் அந்த சவாலை ஏற்பாரா? என ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
அதுபோல தற்போது #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது.
ஒருவர் மரக்கன்றை நட்டு படம் எடுத்து வெளியிட்டு மற்ற மூவருக்கு சவால்விட வேண்டும்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு அவரது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றை வைக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது.
இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், தளபதி விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன் என்றார்.
அந்த செய்தியை நமது தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றை நட்டார் தளபதி விஜய் அந்த படங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தளபதி நடிகர் விஜய்.
This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe pic.twitter.com/1mRYknFDwA
— Vijay (@actorvijay) August 11, 2020











