தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு 50 வயதில் 2வது திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு. இவருக்கு தற்போது 50 வயதாகிறது. அவர் கடைசியாக தமிழில் சூப்பர் ஹிட்டான ‘96′ படத்தை ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

அவர் தயாரிப்பில் உருவான முதல் ரீமேக் படம் இது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

50 வயதாகும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி அனிதா
கடந்த 2017ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அதன்பிறகு, திருமணம் குறித்த எண்ணமில்லாமல் இருந்த அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாரானார்.இதனையடுத்து இவரது மகள் தன் தந்தையை 2வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து ஆந்திரா, நிஜாமாபாத் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நடுத்தர வயது தேஜஸ்வினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தில் ராஜு .

கொரோனா ஊரடங்கு நேரத்தில் இத்திருமணம் நடைபெற்றதால் மிக எளிமையாக நடந்துள்ளது.

error: Content is protected !!