நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது உண்மையா? என்னதான் ஆச்சு..?

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள போதிலும் கொரோனா பொது முடக்கத்தால் ரிலீசாகவில்லை.

நாளை மறுநாள் மே 29ஆம் தேதி சூர்யா தயாரித்துள்ள ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியாகிறது.

இதனிடையில் சூர்யாவுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் ‘GET WELL SOON SURIYA ANNA ‘ என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

சென்ற வாரம் வீட்டில் உள்ள ஜிம்மில் ஒர்கவுட் செய்து கொண்டிருந்தாராம் நடிகர் சூர்யா. அப்போது கையில் ஒரு சின்ன காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தான் சிலர் பெரிதுப்படுத்தி செய்தியாக பதிவிட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்கள் சூர்யா கைவசம் உள்ளது.

error: Content is protected !!