நான்கு நாட்களில் 330 கோடியாம்; வசூல் மழையில் சாஹோ!

330 கோடியை 4 நாட்களில் குவித்து சாதனை படைத்திருக்கிறது பிரபாஸின் “சாஹோ”.

பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்த அடுத்த படம் தான் ‘சாஹோ’. இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது.

ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியை கடந்து சாதனை படைத்த “சாஹோ” இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை கடந்தது. வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்து 330 கோடியை குவித்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், “சாஹோ” இந்தியில் வசூலை அள்ளி குவித்து ஒரு மிகச்சிறந்த உச்ச சாதனை படைத்த அறிமுகமாக மாறியுள்ளது.

நெகடிவ் விமர்சனங்களையும் கடந்து, இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது எப்படி என புரியாமல் விழித்துக் கொண்டு வருகின்றனர் பலர்.

error: Content is protected !!