பண மோசடி புகார் – இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்*
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ரூ.21 லட்சம் பெற்றுக் கொண்டு பண மோசடி செய்ததாக பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவர் சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒப்பந்தப்படி அடுத்த கட்ட பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியத்தால் தர முடியவில்லை என்றும், இதனால் எஸ்.ஏ.சந்திரசேகர தமிழகமெங்கும் வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கோடிக்கணகான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.











