நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகர் ஆர்.கே.சுரேஷ் ஒரு கோடி மோசடி கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

சென்னை 01 ஜூலை 2021

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகர் ஆர்.கே.சுரேஷ் ஒரு கோடி  மோசடி கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகர் ஆர்.கே.சுரேஷ் கடன் வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக தொழிலதிபரின் மனைவி புகாரளித்துள்ளார்.

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் 10 கோடி வாங்கித் தருவதாகக் கூறி வாங்கித் தருவதற்கு முன்பாகவே ஒரு கோடியை கமிஷனாக பெற்றுக் கொண்டு கடனும் வாங்கித் தராமல், கமிஷனையும் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்ற பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வீணா அளித்த புகார் மனுவில், “என் கணவர் ராமமூர்த்தி SBT என்ற பெயரில் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

எங்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

அநத நஷ்டத்தை சரி செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கி தருவதாக சென்னையில் உள்ள கமல கண்ணன் என்பவர் கூறினர்.

இதையடுத்து நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் வீணா மற்றும் ராமமூர்த்திக்கு அறிமுகமானார்.

அதன் பேரில் திரைப்பட நடிகரான தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷை கமலகண்ணன் எனக்கும் எனது கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனக்கு தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் எற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷனாக 1 கோடி கொடுக்கும்படி கூறினர்.

அவரை நம்பி எனது கணவர் 1 கோடி எற்பாடு செய்து நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்கில் 93 லட்சமும், நேரடியாக 7 லட்சம் பணமாக கொடுத்தோம்.

அதன் பிறகு என்னையும் எனது கணவரையும் வளசரவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் மற்றும் கமலகண்ணன் அழைத்து சென்றனர்.

அங்கு வங்கி மேலாளர் முன்னிலையில் என்னிடமும் எனது கணவரிடமும் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர்.

பிறகு விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்தும் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர்.

மேலும் நிரப்பப்படாத காசோலைகளிலும் என்னிடமும் எனது கணவரிடமும் நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கையெழுத்து வாங்கி வைத்து கொண்டார்.

வங்கி மேளாளர் சக்திவேல் 10 கோடி ருபாய் கடன் தொகையை உங்கள் வங்கி கணக்கில் வரும் என கூறி என்னையும் எனது கணவரையும் அனுப்பிவிட்டார்.

ஆனால் அவர்கள் சொன்னபடி 10 கோடி பணம் எங்கள் வங்கி கணக்கிற்கு வரவில்லை.

இது குறித்து நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷை அணுகிய போது அவர் மிரட்டும் தோரணையில் “பணம் தர முடியாது.

என்னையும் எனது கணவரையும் மிரட்டியும் வாய்க்கு வந்தபடி பேசியும் உன்னால் முடிந்ததை பார்த்து கொள்…” என்று கூறினர்.

அப்போதுதான் எனது கணவருக்கும், எனக்கும் எங்களை நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.

நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கடன் வாங்கி தருவதாக ஒரு கோடியைப் பெற்றுக் கொண்டு தனது வீட்டை எங்கள் பெயருக்கு ஓர் விற்பனை பத்திரம் பதிவு செய்து, அதை வங்கியில் அடமானம் வைத்து அந்தக் கடன் பணத்தை அவர் பெற்றுக் கொண்டு எங்களை ஏமாற்றியிருப்பது எங்களுக்கு அப்போதுதான் தெரிய வந்தது.

இதனால் மன உளைச்சல் எற்பட்டு எனது கணவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

எங்களுக்கு தர வேண்டிய ஒரு கோடி பணத்தை கேட்டு பல முறை நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷை அணுகியபோது அவர் என்னையும் என் மகன்களையும் கொலை செய்து விடுவதாக விழுப்புரத்தில் உள்ள அவரது அடியாட்களை வைத்து மிரட்டி வந்தார்.

மேலும், எங்களை இந்த பிரச்னையில் இருந்து காப்பாற்றுவதாக கூறி சென்னையில் உள்ள ஒரு நிழல் உலக தாதா தொடர்பு கொண்டு எங்களுக்கு உதவி செய்வதாக கூறி நிரப்பப்படாத பத்திரத்தில் கையெழுத்து பெற்று கொண்டார்.

ஆனால் அவரும் நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் கூட்டாளிகள் என்று தெரிய வந்தது.

எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் எங்களை ஏமாற்றிய நடிகர் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் நிழல் உலக தாதா மீதும் நடவடிக்கை எடுத்து எங்களது ஒரு கோடி ரூபாயைப் பணத்தை பெற்று தர வேண்டும்.

விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்ற பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த அந்தப் புகாரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.