*பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கதிரவன் இணையும் புதியப்படம்*

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 23ம் தேதி காலை 10 மணியளவில் பிரபல *சக்ஷ்டி* தயாரிப்பில் பழம்பெரும் நடிகர் *தியாகராஜன்* நல்லாசியுடன் நடிகர் *கதிரவன்* கதையின் நாயகனாக நடிக்கும் *வன்முகம்* பைலட் படத்தின் பூஜை மிக சிறப்பாக படக்குழுவினருடன் நடைபெற்றது.

படத்தை *ரஞ்சித் பால்ராஜ்* இயக்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் *ராஜேஷ்*, படத்தொகுப்பாளர் *ஜெயவினோ*, இசையமைப்பாளர்கள் *பாலசுந்தர் & டேனி*, மற்றும் பல படக்குழுவினர்கள்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் புதுச்சேரி மாநில பகுதிகளில் நடைபெற உள்ளது.

இச்சமுதாயத்தில் நடைபெறும் சில அவளநிலைகளை பற்றி எடுத்துரைக்கும் ஒரு நல்ல படமாக இது இருக்கும். இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என்று படக்குழுவினர் உறுதியாக கூறுகின்றனர்.

*நடிகர் தியாகராஜன்* அவர்கள் இந்த படக்குழுவினர்களை அழைத்து பாராட்டியுள்ளார் என்பது தனி பெரும் சிறப்பு.

error: Content is protected !!