மீண்டும் சர்ச்சையில் சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம்
இயக்குனர் பொன்.ராம் இயக்கத்தில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிக்கும் படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. இந்தப் படத்தில் கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்து வருகிறார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்பவர் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்துள்ளார். அதன்படி தன்னுடைய கதையில் பேரன் என குறிப்பிட்டதை, மகன் என மாற்றி, இப்படத்தை எடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.











