ராசி பலன்கள வெள்ளிக்கிழமை 06.09.2019்
*☸ மேஷம் ராசி:-*
உறவினர்களிடம் அமைதியுடன் செயல்படவும். மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில பிரச்சனைகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சர்வதேச வணிகம் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : அமைதி காக்கவும்.
பரணி : பிரச்சனைகள் ஏற்படும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
*☸ரிஷபம் ராசி:-*
குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் அகலும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : தடைகள் அகலும்.
மிருகசீரிடம் : ஆசிகள் கிடைக்கும்.
*☸ மிதுனம் ராசி:-*
குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணி சம்பந்தமான முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.
*☸ கடகம் ராசி:-*
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : மனக்கசப்புகள் நீங்கும்.
*☸ சிம்மம் ராசி:-*
கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனைவிவழி உறவுகளால் மேன்மையான சூழல் அமையும். பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
*☸கன்னி:-*
கலை சார்ந்த அறிவு மேம்படும். அறச்செயல்கள் புரிவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திரம் : ஞானம் மேம்படும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : தடைகள் நீங்கும்.
*☸ துலாம் ராசி:-*
நண்பர்களின் உதவியால் ஆதாயமான சூழல் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாதத்திறமையால் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்கவலைகள் நீங்கி அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : அமைதி நிலவும்.
*☸ விருச்சிகம் ராசி:-*
இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிதே நிறைவுறும். பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயித்து அதை செயல்படுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பழுப்பு
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : பொருளாதாரம் மேம்படும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.
*☸ தனுசு ராசி:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். அலைச்சல்கள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் ஏற்படும் பழுதுகளால் எதிர்பாராத செலவுகள் நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : கவனம் வேண்டும்
பூராடம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திராடம் : செலவுகள் அதிகரிக்கும்.
*☸ மகரம் ராசி:-*
தந்தைவழி சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான சூழல் அமையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். புதிய உத்வேகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : சொத்துச்சேர்க்கை உண்டாகும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
*☸ கும்பம் ராசி:-*
உயர் அதிகாரிகளால் அனுகூலமான செயல்கள் நடைபெறும். பொது நலத்திற்கான எண்ணங்கள் மேலோங்கும். தொலைத்தொடர்புதுறை சம்பந்தமான துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் மேலோங்கும்.
சதயம் : உயர்வு கிடைக்கும்.
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
*☸ மீனம் ராசி:-*
தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். முக்கிய ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். தொழில் சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.
உத்திரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
ரேவதி : நிதானம்
வேண்டும்.











