ராஜவம்சம் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.25 /5.

நடிகர் நடிகைகள் – சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி, மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், OAKசுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா, மற்றும் பலர்.

தயாரிப்பு – செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்.

இயக்கம் –  KV  கதிர்வேலு

ஒளிப்பதிவு – சித்தார்த்

படத்தொகுப்பு – சபு  ஜோசப்

இசை – சாம்.சிஎஸ்

திரைப்படம் வெளியான தேதி –26 நவம்பர் 2021

ரேட்டிங் – 2.25 /5

தமிழ் திரைப்பட உலகில் தான் நமது கலாச்சாரத்தையும் நமது முன்னோர்களின் மகத்துவத்தையும் இன்றும் வந்துவிட்டோம்.

கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை சொல்லும் ஒரு திரைப்படம் அதோடு இன்றைய நாகரிகத்தையும் கலந்த ஒரு கலைவையாக சொல்லி இருக்கிறார். இயக்குனர் கே.வி.கதிர்வேலு.

இன்று நாகரிக உலகத்தில் திருமணம் ஆனவுடன் வரும் மருமகள் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை தெரியாமல் திருமணமாகி வரும் பெண்கள் தனி குடுத்தனம் செல்கிறார்கள்.

இன்று நாகரீக உலகில் கூட்டுக்குடும்பத்தில் அருமை பெருமைகளை கூறும் ஒரு திரைப்படம் தான் ராஜவம்சம்.

தனிக் குடித்தனம் வேண்டாம், கூட்டுக் குடும்பமாக உறவுகளோடு வாழுங்கள் என்கிறது இந்த திரைப்படம்.

பொள்ளாச்சி பக்கத்தில் உள்ள கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணியில் பிறந்த கதாநாயகன் சசிகுமார்.

சென்னையில் உள்ள மிக் பெரிய ஐ.டி. கம்பெனியில் ஒன்றில் டீம் லீடராக
வேலை பார்க்கிறார்.

இவருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது.

தனது கனவு ப்ராஜக்ட்டாக நினைத்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இன்னொரு புறம் கதாநாயகன் சசிகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

கதாநாயகன் சசிகுமாருக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமண நிச்சயம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுக்கிறார்கள்.

ஆனால், அந்தப் பெண் அவள் விரும்பிய மாமாவுடன் செல்ல சசிகுமார் உதவி செய்கிறார்.

தனது நிச்சயத்தை நிறுத்த உடன் வேலை பார்க்கும் நிக்கி கல்ரானியை தனது காதலி என பொய் சொல்லி குடும்பத்தார் முன் நிறுத்துகிறார்.

தாயார் சொன்னதை போல் திருமணம் செய்து கொண்டாரா இல்லை தன்னை நம்பி கொடுத்த ப்ராஜக்டா என்ற நிலைக்கு கதாநாயகன் சசிகுமார் தள்ளப்படுகிறார்.

இறுதியில் கதாநாயகன் சசிகுமார் எடுத்த முடிவு என்ன? திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? நம்பி கொடுத்த புராஜெக்டை நிறைவு செய்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த ராஜவம்சம் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் தனக்கே எற்ற பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார்.

குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

கதாநாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

இவருடைய சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில் கதாநாயகி நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார்

கதாநாயகி நிக்கி கல்ரானி கதாபாத்திரத்தில் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர்.

அந்த டிவிஸ்ட்டிற்குப் பிறகுதான் கதாநாயகி நிக்கி கல்ரானிக்கு நடிக்கக் கொஞ்சம் வாய்ப்பு.

அவரை வைத்தும் உறவுகளின் சிறப்பைச் சொல்லியிருக்கிறார்கள்.

யோகிபாபு எப்போதும் மாட்டுக் கொட்டகையிலேயே இருக்கிறார்.

யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

தம்பி ராமையாவின் கூச்சலான நடிப்பு, ஆண் கோவை சரளா போல உள்ளது.

வழக்கம் போல தான் பேசுவது எல்லாமே ஜோக் என நினைத்துப் பேசுகிறார் சதீஷ்.

மூவர். அவர்களைப் பார்த்து ஒரு பதட்டம் கூட வரவில்லை. பல முறை நடித்த கதாபாத்திரத்தில் முறையாக ராதாரவி நடித்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு.

திரைப்படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு.

ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்த உறவுகளைத்தான் கண்கள் தேடும்.

யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போல் குடும்ப உறவுகளை சொல்லும் வசனங்கள் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சாம் சிஎஸ் இசை என டைட்டிலில் போடுகிறார்கள். அவர்தான் இசையமைத்திருப்பாரோ என்பது சந்தேகமாக உள்ளது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார்.

கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.

மொத்தத்தில் ‘ராஜவம்சம்’ குடும்பங்களின் கொண்டாட்டம்.