லண்டனில் தீபாவளி கொண்டாடும் ‘பிகில்’ நாயகன்

 இயக்குனர் அட்லீ – நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் லண்டன் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. அவரைத் தொடர்ந்து அவரது மனைவி சங்கீதா, மகள் சாஷா, மகன் சஞ்சய் ஆகியோரும் தீபாவளிக்கு லண்டன் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் லண்டனில் ‘பிகில்’ படத்தைக் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!