வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “
டேக் ஓகே சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ” மிரட்சி ” ஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர் ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ரவி.V
எடிட்டர் – N.ஹரி
இசை – ஆனந்த்
பாடல்கள், வசனம் – N.ரமேஷ்
தயாரிப்பு – P.ராஜன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – M.V.கிருஷ்ணா
படம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது..
மிரட்சி இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட படம்.இதுவரை வெளியான சைக்கோ திரில்லர் படங்கள் எல்லாமே ஒரே சீரியஸ் மூடில் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த வகையான சீரியஸ் மூட் அதிகமாகவும், மிரட்டலாகவும் இருந்தாலும், இளமையான, அழகான காதலும், தரமான காமெடிகளும், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளும், மனதை மயக்கும் இசையில் தெளிவான பாடல்களும் இடம்பெற்றிருக்கும்.
தன காதலுக்கு எதிராக இருக்கும் அம்மாவை மீறி தன்னை உயிராக நேசிக்கும் நாயகனின் காதலை ஏற்க தன்னுள் மனப்போராட்டம் நடத்துகிறாள்.அந்த நிலையில் பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறாள், இறுதியில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே திரைக்கதை. கோவாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டுதான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதன் கிளைமாக்ஸ் காட்சிகளை மூன்று நாட்கள் 72 மணி நேரம் தொடர்ந்து படமாக்கினோம். ஜித்தன் ரமேஷ் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
படம் முழுக்க முழுக்க கோவாவில் படமாக்கி இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் V.M.கிருஷ்ணா
Related posts:
ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “
நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதையில் சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’.!
தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்திப் படுத்த முடியாது ” மிரட்சி ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா பேச்சு..
இயக்குநர் வசந்தபாலனின் துணை இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் வித்தியாசமான ஹாரர் திரைப்படம்..
பிரஜன் – அஜீத் நாயக் நடிக்கும் அரசியல் கலந்த் திரில்லர் படம் இன்று பூஜையுடன் துவங்கியது.
வில்லனாக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளரின் மகன்
அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் எஸ் எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்.
நடிகர் ‘அங்காடித் தெரு ‘ மகேஷ் நடிக்கும் ‘ஏவாள் ‘ ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் திரைப்படம்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் ‘சைக்கோ’ படத்தின் அப்டேட்

