16 சர்வதேச விருதுகளை பெற்ற “குழலி” திரையரங்குகளை நோக்கி!!

சென்னை 16 செப்டம்பர் 2022 16 சர்வதேச விருதுகளை பெற்ற “குழலி” திரையரங்குகளை நோக்கி!!

“குழலி” திரைப்படம் உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், விமர்சன ரீதியான திரைப்படத்திற்கான விருதையும், பின்னணி இசைக்கான விருதையும், சிறந்த நடிகைக்கான விருதையும், என 16 விருதுகளை பெற்ற “குழலி” வரும் 23 ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது.

நடிப்பிற்கான தேசிய விருதையும், தமிழக அரசு விருதையும், பெற்ற ‘விக்னேஷ்’ ( காக்காமுட்டை) கதை நாயகனாகவும், ‘ஆரா’ கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் “குழலி” திரைப்படம் முற்றிலும் கிராமத்து எதார்த்த முகங்களோடு சிறந்த திரைப்படமாக உருவாகி உள்ளது.

இப்படத்திற்கு DM உதயகுமார் இசையமைக்க., கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி, மற்றும் ஆக்னஸ் தமிழ்செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுத, ஷமீர் இன் ஒளிப்பதிவில் வழுவான திரைக்கதை வசனத்துடன் உணர்வாக்கி இருக்கிறார் இயக்குநர் செரா. கலையரசன். இப்படத்தை K.P. வேலு, S.ஜெயராமன், மற்றும் M.S . ராமசந்திரன் அவர்கள் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கான வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது . இத்திரைப்படத்தினை

“மொழி திரைக்களம்” நிறுவனம் வெளியிடுகிறது .