2 K1 KIDS எதிர்காலம்? மாண்புமிகு ஆத்விக்கு போஸ்டர்; அஜித்குமார் கண்டிப்பாரா?
அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்களுக்கு அனோஷ்கா (பிறந்த வருடம் 2008) ஆத்விக் (பிறந்த வருடம் 2015) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதில் ஆத்விக்கின் பிறந்த நாள் மார்ச் 2 இன்று கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி அஜித்குமாரின் ரசிகர்கள் இணையத்தளங்களில் டிரெண்டிங் செய்ய தொடங்கியுள்ளனர்.
மேலும் தமிழகத்தின் சில இடங்களில் விழா ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த அஜித்குமார் ரசிகர்கள் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த போஸ்டரில் 2.1K Kids in எதிர்காலமே..! மாண்புமிகு திரு. ஆத்விக் அஜித்குமார்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடித்துள்ளனர்.
இந்த வாசகத்தின் பின்னால் தமிழக சட்டசபை மற்றும் பாராளுமன்ற படங்களும் இடம் பெற்றுள்ளது.
ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடலாம். அவரின் குடும்பத்தாரின் பிறந்தநாளை கூட கொண்டாடலாம் தவறில்லை.
ஆனால் 5 வயதே ஆகும் ஒரு சின்ன குழந்தையை மாண்புமிகு என்பதும் எத்தகைய தவறான செயலாகும்.
மாண்புமிகு என்ற சொல் அரசு பதவிகளில் அமர்ந்திருக்கும் நபர்களுக்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும். அதை ஒரு குழந்தைக்கு பயன்படுத்துவதால் அதுபோன்ற செயல்களில் பலரும் நாளை ஈடுபடக்கூடும்.
மேலும் மதுரை ரசிகர்களை தொடர்ந்து அவர்களுக்கு போட்டியாக மற்றொரு பிரிவினர் இந்தியாவின் முதல் குடிமகனே… பாராளுமன்றத்தின் பலமே… என்ற சொற்களை பயன்படுத்த கூடும்.
தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் அஜித்குமார். ஆனால் அவரின் ரசிகர்களின் செயல்களால் அவருக்கும் அவப்பெயர் வர வாய்ப்புண்டு.
இதற்கு முன்பே தினம் தினம் அஜித்குமார் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மிகவும் கீழ்த்தரமான வாக்கியங்களை பயன்படுத்தி டிரெண்ட் வருகின்றனர்.
இதை அஜித்தோ விஜய்யோ கண்டிப்பதில்லை. இவர்கள் மௌனமாக இருப்பதால் இது தினம் தொடர்கிறது.
அஜித்குமார் போஸ்டர் வந்தால் விஜய் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். அதுபோல் விஜய்க்கும் நடக்கிறது.
அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போதும் அஜித்குமார் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர். அதற்கு எதிராக இவர்களும் டிரெண்ட் செய்தனர்.
தல தளபதி இருவரும் வாய் திறந்தால் அல்லது அறிக்கை விட்டால் தான் இதற்கு முடிவு உண்டாகும். அப்போது தான் ரசிகர்கள் நிச்சயம் அமைதி காப்பார்கள்.
தான் சம்பந்தப்பட்ட பட விழாவுக்கே வராத அஜித்குமார் இதை கண்டிப்பாரா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
ஆனால் நடிகர்கள் அமைதியாக இருப்பதால் ஒருவேளை அவர்கள் இதுபோன்ற செயல்களை ஆதரிக்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது.
நாளை சமுதாயம் ஒரு தவறான பாதைக்கு சென்ற விடக்கூடாது என்ற ஆதங்கமே இந்த பதிவு.











