நடிகர்கள் விஜய் அஜித்குமார் குறித்து ஷாருக்கான் கருத்து

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, ரசிகர்கள் சிலர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித்குமார், விஜய், தனுஷ் ஆகியோர் குறித்து ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அஜித்குமார் பற்றிப் பேசிய அவர், ‘என் நண்பர்’ எனப் பதிலளித்தார். நடிகர் விஜய் பற்றிக் கூறுமாறு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ‘அற்புதமானவர்’ எனறும், தனுஷ் பற்றி கேட்டதற்கு, “எனக்கு அவரைப் பிடிக்கும்” எனவும் பதிலளித்தார்.

error: Content is protected !!