2019 இந்தியாவில் 100 ஸ்டார்ஸ்: தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் பர்ஸ்ட்; தளபதி விஜய் & அஜித்குமார் எங்கே?

நடப்பாண்டில் 2019 அதிக சம்பளம் பெற்ற டாப் 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் அவர்களின் புகழ் அளவை மையமாக வைத்து இந்த தரவரிசையை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

அதிக சம்பளம் பெற்ற 100 இந்திய பிரபலங்களின் எப்போதும் நடிகர்களே முதலிடம் இருப்பார்கள். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாததாக முதல் முறையாக நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதே போன்று டாப் 10 பட்டியலில் முதல் முறையாக 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

2019 ம் ஆண்டில் பெற்ற சம்பளம், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்கள் மூலம் பெற்ற புகழ், பொழுதுபோக்கு அம்சம், முதலீடு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ் திரைப்பட உலகை சேர்ந்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித்குமார், தனுஷ்,
இயக்குனர்கள்
ஷங்கர், சிவா,கார்த்திக் சுப்பராஜ் & இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு….

1. விராத் கோஹ்லி (253.72 கோடி)

2. அக்சய் குமார் (293.25 கோடி)

3. சல்மான் கான் (229.25 கோடி)

4. அமிதாப் பச்சன் (239.25 கோடி)

5. எம்எஸ்.தோனி (135.93 கோடி)

6. ஷாருக்கான் (124.38 கோடி)

7. ரன்வீர் சிங் (118.2 கோடி)

8. ஆலியா பட் (59.21 கோடி)

9. சச்சின் டெண்டுல்கர் (76.96 கோடி)

10. தீபிகா படுகோனே (48 கோடி)

தென்னிந்தியா…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – 13வது இடம் (100 கோடி)

ஏ.ஆர்.ரகுமான் – 16வது இடம் (94.8 கோடி)

ஷங்கர் மகாதேவன் – 24வது இடம் (76.48 கோடி)

மோகன்லால் – 27 வது இடம் (64.5 கோடி)

பிரபாஸ் – 44வது இடம் (35 கோடி)

விஜய் – 47 வது இடம்(30 கோடி)

அஜித் – 52வது இடம் (40.5 கோடி)

மகேஷ் பாபு – 54 வது இடம்(35 கோடி)

டைரக்டர் ஷங்கர் – 55 வது இடம்(31.5 கோடி)

கமல்ஹாசன் – 56வது இடம் (34 கோடி)

மம்முட்டி – 62 வது இடம்(33.5 கோடி)

தனுஷ் – 64 வது இடம்(31.75 கோடி)

சிறுத்தை சிவா – 80வது இடம் (12.17 கோடி)

டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் – 84வது இடம் (13.5 கோடி)

ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்