27 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த ‘ரோஜா’ பட ஜோடி !*

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு நடிகர் அரவிந்த்சாமி, நடிகை மதுபாலா நடிப்பில் வெளியான படம் ‘ரோஜா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த ஜோடி மீண்டும் 27 வருடங்கள் கழித்து ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது. இது குறித்து நடிகை மது பாலா கூறுகையில், தமிழில் தான் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக உள்ளது என்றும், நடிகர் அரவிந்த் சாமியுடன் இந்தியில் ஒரு படம் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.