தனது மகனுக்காக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது வியப்பில் ரசிகர்கள்!!

சென்னை 22 ஆகஸ்ட் 2022 தனது மகனுக்காக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது வியப்பில் ரசிகர்கள்!!

தன் மகனுக்காக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ் திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ், கடந்த 2014-ஆம் வருடம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் முத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

இதையடுத்து 18 வருடம் இருவரும் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக நடிகர் தனுஷ் அறிவித்தார்.

இந்த விவாகரத்து முடிவை இருவரும் இணைந்து எடுத்ததாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி மீண்டும் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகி வந்தது.

அதனால் எப்போது இவர்கள் இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியின் மூத்த மகனான யாத்ரா லிங்கா, தான் படிக்கும் பள்ளியில் ஸ்போர்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இணைந்து சென்றுள்ளனர்.

தன் மகனுக்காக நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இணைந்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.