’29’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- விது, பிரீத்தி அஸ்ராணி, ஆதிரா பாண்டியலட்சுமி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, சிந்து ஷ்யாம், பிரேம் குமார், அவினாஷ், கிரண், ஆறுமுகவேல், எஸ்.ஏ.சதிஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப், அனுஸ்ரீவேலன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ரத்னகுமார்.
ஒளிப்பதிவாளர் :- மாதேஷ் மாணிக்கம்.
படத்தொகுப்பாளர் :- ஆர்.எஸ்.சதீஷ்குமார்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, ஜீ ஸ்குவாட்.
தயாரிப்பாளர்கள் :- கார்த்திகேயன்.எஸ்,கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ்.
மக்கள் தொடர்பு :- சதீஷ்குமார் (S2 மிடியா)
ரேட்டிங் :- 3.75./5.
“மேயத மான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குநராக பிரபலமானவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்குநராக மட்டுமின்றி மாஸ்டர், லியோ, விக்ரம், போன்ற திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தற்போது இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ’29’.
ரெட்ரோ திரைப்படத்தில் வில்லனாக நடித்த விது இந்த 29 திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
29 வயது இளைஞனுக்கும், 21 வயது பெண்ணுக்கும் இடையிலான காதலையும், அவர்கள் இருவரும் சந்திக்கும் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களையும் நேர்மையான உரையாடல்கள் மூலம் இந்த 29 திரைப்படம் சொல்கிறது.
சேலத்தில் இருந்து சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கதாநாயகன் விது தனக்கு 29 வயதாகியும் தனக்கென்று எந்த ஒரு தனி அடையாளம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் விது பணிபுரிந்து வரும் அதே நிறுவனத்தில் கதாநாயகி பிரீத்தி அஸ்ராணியும், பணிபுரிந்து வருகிறார்.
கதாநாயகன் விது, கதாநாயகி பிரீத்தி அஸ்ராணி, இருவருக்குள் காதல் மலர இவர்களின் காதல் உனக்கு நான் எனக்கு நீ என உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள்.
கதாநாயகி பிரீத்தி அஸ்ரானியின் தன்னை காதலிப்பதால் அந்த காதலால், தனக்கு ஒரு அழகான பெண்ணின் காதலன் என்ற அடையாளம் கதாநாயகன் விதுவுக்கு கிடைக்கிறது.
தனக்கு கிடைத்த ஒரு அழகான பெண்ணின் காதலன் என்ற அடையாளமும், கதாநாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதல் மட்டுமே போதும் என வாழ்ந்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் விதுவுக்கு, காதல் மட்டுமே உனக்கான வாழ்க்கை இல்லை, அதை தாண்டி ஒரு உனக்கு ஒரு மிகப்பெரிய வாழ்க்கையும், அந்த வாழ்க்கையை உனக்கென்று அடையாளத்தை சாதிக்க வேண்டியதும் அவசியம், என்பதை கதாநாயகன் விதுவுக்கு புரிய வைக்க பல சந்தர்ப்பங்களில் கதாநாயகி பிரீத்தி அஸ்ரானி முயற்சி செய்கிறார்.
கதாநாயகன் விதுவுக்கு பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்தும் ஆனால், எந்த ஒரு முயற்சியும் முடியாமல் போக அதனால் தங்களது காதலில் இருந்து விலகிக் கொள்ளலாம் என கதாநாயகி பிரீத்தி அஸ்ரானி முடிவு செய்கிறார்.
தனக்கென்று கிடைத்த அடையாளமாக நினைத்த ஒரு அழகான பெண்ணின் காதலன் காதலும், தனது காதலி கதாநாயகி பிரீத்தி அஸ்ரானி கைவிட்டு போன பிறகு, மீண்டும் தனக்கான அடையாளத்தை தேடி பயணப்படுகிறார்.
கதாநாயகன் விது தனது வாழ்க்கையில் தனக்கான அடையாளத்தை மீண்டும் உருவாக்கினாரா?, இல்லை உருவாக்கவில்லையா ?,
கதாநாயகன் விது கதாநாயகி பிரீத்தி அஸ்ரானி காதலில் இருந்து விலகிய இவர்கள் மீண்டும் காதலில் இணைந்தார்களா?, காதலில் இணையவில்லையா?, என்பதுதான் இந்த ’29’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ’29’ திரைப்படத்தில் கதாநாயகனாக விது நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விது ஏற்கனவே நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’ரெட்ரோ’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய இவர், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
நாம் வசிக்கும் ஏரியாவில் பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிமையான தோற்றம், எதார்த்தமான நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி கதாநாயகன் விது தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருவார், என்ற மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விதுவை, பார்த்தவுடன் மனதுக்கு பிடிக்கும் அளவிற்கு இல்லை என்றாலும் பார்க்க பார்க்க கண்டிப்பாக பிடிக்கும் அளவிற்கு இருக்கிறார்.
இந்த ’29’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரீத்தி அஸ்ரானி, தனது நடிப்பின் மூலம் விஜி என்ற கதாபாத்திரத்தில் விஜியாகவே வாழ்ந்து திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் கவர்கிறார்.
கதாநாயகன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவினாஸ், காதல் தோல்வியில் புலம்புவது மட்டும் இன்றி அவ்வபோது இறுக்கமான சூழல்களை விலக்கி, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், கதாநாயகன் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலக்ஷ்மி, கதாநாயகியின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்து ஷியாம் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மூலம் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் காதலர்கள் கொண்டாட்டத்தையும், காதலின் வலியையும் மெதுவாக பயணித்தாலும் காட்சிகளை ரசிக்க வைக்கும் விதத்தில் பின்னணி இசை மிகவும் உணர்வுப்பூர்வமாக பயணித்திருக்கிறார்.
ஒரு பெண்ணை காதலிக்கும் போது ஆண்கள் மான் விழி, மீன் விழி, கருங்கயல் கண்கள், கூர்மையான பார்வைகள், மையிட்ட கண்கள், நிலவு போன்ற முகம். முத்துச் சிரிப்பு, நிலவின் ஒளி, இதழ் மலர்ச்சி, மயக்கும் புன்னகை மலர், நட்சத்திரம் கார்கால மேகம், கருமேகக் கூந்தல், அலையலையாய் ஆடும் கூந்தல், நறுமணம் வீசும் கூந்தல் என்று வர்ணித்தாலும் கடைசியில் அவள் ஒரு பெண் மட்டுமே ஒரு அழகான ஆண்களை பெண்கள் விரும்பும் போது ஆண் சிங்கம், காளை சிறப்பான குணம், அழகான தோற்றம் மற்றும் வலுவான மற்றும் கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்டவர் என பலவிதமாக வர்ணித்தாலும் அவன் எப்போதும் ஒரு ஆண் மட்டுமே, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், எதார்த்தமான வாழ்க்கையை விட பெரியது அல்ல, அதையும் தாண்டி இங்கு சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது, என்பதை சொன்ன விதமும், அதற்கான காட்சிகளை கையாண்ட முறையும், காதலித்துக் கொண்டிருக்கும் காதலர்களை மட்டும் அல்ல காதலிக்காதவர்களையும் கொண்டாடும் வகையில் இந்தக் கதையை கவிதையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரத்தன குமார்.
ஒரு ஆணும் பெண்ணும் என்னதான் உயிருக்கு உயிராக உருகி உருகி பல ஆண்டுகள் காதலித்தாலும், காதல் பயணத்தின் முடிவு என்பது சில நிமிட கட்டிலில் நடக்கும் காமம் மட்டுமே, என்பதை கவித்துவத்தோடும், நாகரீகமான முறையிலும் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
மொத்தத்தில், ‘29’ திரைப்படம் அனைத்து வயது உடைய காதலர்களை கொண்டாட வைக்கும்.



