Monday, May 25
Shadow

3000 கோடி சிலை பாரத பிரதமருக்கு நடிகரின் ஓவியம் புரிய வைத்திருக்கும்.

உலகமே கொரோனா வைரஸ் அனைவரும் பயந்து அதை தடுப்பதற்காக முயற்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

பல உயிர்களை கொரோனா வைரஸ் கொன்று குவித்து வருவதால் அதை தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கான கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வருகின்றது.

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்களிடம் நிவாரண நிதி கேட்டு வருகிறார் மத்திய அரசும் மாநில அரசும்.

அதற்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வருவாயை இறந்துள்ளனர்.

வேலை காரணமாக தங்கள் குடும்பத்தை விட்டு வேறு மாநிலங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

போக்குவரத்து இல்லாத காரணத்தாலும் மக்களிடம் பணம் இல்லாத காரணத்தாலும் நிறைய மக்கள் நடந்து செல்ல துணிந்து விட்டார்கள்.

கொரோனா வைரஸ் நிவாரண நிதி மற்றும் நடந்து செல்லும் மக்கள் இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் நடிகர் பொன்வண்ணன் ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார்.

நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கீழே ஏராளமான தொழிலாளர்கள் நடந்து செல்வது போன்று ஓவியத்தை வரைந்து உள்ளார் நடிகர் பொன்வண்ணன்.

இதிலிருந்து நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது ரூபாய் 3 ஆயிரம் கோடியில் மக்கள் வரிப்பணத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை யை மோடி நிறுவினார் அப்போது அதற்கு மக்களிடம் அனுமதி கேட்கவில்லை ‌.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நிதிக்காக மக்களிடமே கையேந்தி நிற்கிறார் நமது பிரதமர் மோடி சிலை வைத்த அந்த பணத்தை வைத்து மக்களுக்கு உதவி இருக்கலாமே.

மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் அதற்கு நமது பாரதப் பிரதமர் மோடி வைத்த சிலை மட்டும் வானுயர உயர்ந்து நிற்கிறது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஓவியம் ஆக மக்களின் அவலத்தை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது