கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க நடிகர் பிரபாஸ் ரூபாய் நாலு கோடி அரசுக்கு நிவாரண நிதி வழங்கினார்.

பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய அரசும் மாநில அரசும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை போட்டுள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

மேலும் பிரபலங்கள் நிவாரண நிதியை கொடுக்கலாம் என அறிவித்துள்ளார்.

எனவே தெலுங்கு திரைப்பட உலக நட்சத்திரங்கள் பலரும் அரசுக்கு நிவாரண நிதி உதவ முன் வந்திருக்கின்றனர்.

நடிகர் மகேஷ்பாபு அவர்கள் ரூபாய் 1 கோடி அரசுக்கு நிவாரண நிதி கொடுத்துள்ளார்

நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர்கள் ரூபாய் 2 கோடி அரசுக்கு நிவாரணநிதி வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் அவர்கள் ரூபாய் நாலு கோடி அரசுக்கு நிவாரண நிதியாக தருவதாக அறிவித்துள்ளார்.

பாரத பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூபாய் மூன்று கோடியும் ஆந்திரா முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார்

ஆகமொத்தம் ரூபாய் நாலு கோடி பிரபாஸ் கொடுத்துள்ளார்.

இனி எந்த நடிகரும் இவரை மிஞ்சி கொடுத்துவிட முடியாது என்று நம்பலாம்