இயக்குநர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் – 2 திரைப்படத்தை விசுவின் சிஷ்யன் வி.எல்.பாஸ்கர்ராஜ் இயக்குகிறார்.
இயக்குநர் விசு அவர்கள் எழுதி இயக்கிய ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம் ‘ திரைப்படம் தேசிய விருது பெற்ற மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்.
34 வருடங்களுக்கு பிறகு மறைந்த இயக்குனர் விசு அவர்கள் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள சம்சாரம் அது மின்சாரம்‘ அவரின் லட்சிய திரைப்படமாகும்.
இந்த சம்சாரம் அது மின்சாரம் இரண்டாம் பாகம் திரைப்படத்தை ‘மக்கள் அரசன் பிக்சர்ஸ் ‘ நிறுவனர் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்கிறார்.
இந்த அரசன் பிக்சர்ஸ் ‘ நிறுவனம் நடிகர் விமல் நடிக்கும் ‘ எங்கள் பாட்டன் சொத்து ” நடிகர் விதார்த் யோகிபாபு நடிக்கும் ‘உலகமகா உத்தமர்கள்’ பா.விஜய் இயக்கத்தில் ஜீவா அர்ஜுன் நடிக்கும் ‘மேதாவி போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
சம்சாரம் அது மின்சாரம் – 2 திரைப்படத்தை விசுவின் சிஷ்யன் வி.எல்.பாஸ்கர்ராஜ் இயக்குகிறார்.
இவர் ராஜ் டிவியில் அகடவிகடம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இசை பரத்வாஜ்,
பாடல்கள் பா.விஜய்,
ஒளிப்பதிவு ராஜவேல் மோகன்,
படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,
கலை வனராஜ்,
மக்கள் தொடர்பு டைமண்ட் பாபு,
தயாரிப்பு நிர்வாகம் ரமணி,
உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா விசு பணியாற்றுகிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்கிரண் வசம் பேசப்படுகிறது மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
“சம்சாரம் அது மின்சாரம் – 2 ‘ திரைப்படத்தின் கதையை பற்றி இயக்குனர் பாஸ்கர்ராஜ் கூறுகையில்- இது சிறுவர்கள் , இளைஞர்கள் , பெரியவர்கள் , அனைவரும் ரசிக்ககூடிய கதம்பமான ஒரு குடும்ப கதை. அனைத்து தரப்பட்ட மக்களையும் திரையரங்கு நோக்கி வரவழைக்கும் இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை இன்னொரு வீட்டில் மின்சாரமாக இருக்கும் சம்சாரத்தின் கதை என்று கூறுகிறார்.












