நடிகர் சிலம்பரசன். டி.ஆர், கேங்ஸ்டர் லுக்கில் போட்டோஷூட் நடத்தி அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சிலம்பரசன். டி.ஆர்.
இவர் தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன். டி.ஆர் ஈஸ்வரன் திரைப்படமும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது.
மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார்.
அதில் தனது திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கேங்ஸ்டர் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ள சிலம்பரசன். டி.ஆர் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ‘சொல்லப்படாத கதை’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
சிலம்பரசன். டி.ஆரின் இந்த மாஸ் லுக்கை பார்த்த அவருடைய ரசிகர்கள் ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்குறியே தலைவா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.
An untold story #Atman #SilambarasanTR pic.twitter.com/xgPd1xjhOp
— Silambarasan TR (@SilambarasanTR_) December 7, 2020
An untold story @SilambarasanTR_#atman #silambarasantr#str@teamaimpr #moviewingz pic.twitter.com/RMccnulWXN
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) December 7, 2020












