ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் படக்குழுவினரை பாராட்டிய சிலம்பரசன் T.R
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிலம்பரசன் T.R.
சிலம்பரசனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதன் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எஸ்.ஜே.சூர்யா மற்றும் மனோஜ் பாரதிராஜாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் இன்று வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அண்மையில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை சிலம்பரசன் பார்த்துள்ளார்.
அவரும் படம்பிடித்து போகவே படக்குழுவினரை பாராட்டி உள்ளார்.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து & கதாநாயகன் அசோக் செல்வன் இருவரும் இத்தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.