Jagame Thandhiram (ஜகமே தந்திரம்) To Exclusively Release on Netflix.
சென்னை 22 பிப்ரவரி 2021
மும்பை 22 பிப்ரவரி 2021 : தமிழின் மிகவும் எதிர்பார்ப்புகுரிய படமான “ஜகமே தந்திரம்” படத்தை Netflix நிறுவனம் தங்களது தளத்தில் பிரத்யேகமாக வெளியிடுகிறது. “ஜகமே தந்திரம்” படம் சுருளி எனும் கேங்க்ஸ்டர் தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதை சொல்லும் படமாகும். இத்திரைப்படத்தை YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. “ஜகமே தந்திரம்” 2021 ல் வெளியாகும் மிகப்பெரும் எதிர்பார்க்க குரிய முதல் திரைப்படம் ஆகும். இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடையவுள்ளது.
Netflix நிறுவனத்துடன் இணைந்தது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது…
“ஜகமே தந்திரம்” எனது கனவு திரைப்படம். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். இக்கதை சொல்லப்பட வேண்டிய முக்கியமான கதை, மேலும் உலகில் உள்ள அனைவரையும் சென்றடைய வேண்டிய கதை. அனைத்து ரசிகர்களையும் சென்றடைய இப்படம் ஒரு புது வழியினை கண்டடைந்துள்ளது. “ஜகமே தந்திரம்” Netflix தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக, ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படுகிறது. ரசிகர்களுக்கு தந்திரமிக்க உலகத்தை Tricky World (ஜகமே தந்திரம்) இப்படத்தின் மூலம் அளிக்க ஆர்வமாக உள்ளேன்.
YNot Studios சார்பில் S.சசிகாந்த் கூறியதாவது…
YNOT Studios, புதியவகை கதைகள் கொண்ட திரைப்படங்களை, துணிவுடன் தயாரிக்கும் நிறுவனம் எனும் பெயரை பெற்றிருக்கிறது. இந்த துணிவு படங்களின் கதைகளங்களில் வித்தியாசம் காட்டுவதோடு மட்டுமல்லாமல், தயாரிப்பு தரப்பிலும், அனைத்து வகை திட்டமிடுதலிலும் புதுமையை கடைப்படிப்பதில் முன்னணி வகிக்கிறது. Netflix நிறுவனத்துடன் இணைந்துள்ளது
எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. Netflix தளம் இந்த தமிழ் கதையினை உலகமெங்கும் எடுத்துசெல்லும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் அயராத உழைப்பு, படத்தில் கண்டிப்பாக தெரியும், ரசிகர்கள் படம் பார்க்கும் போது, தரப்போகும் உற்சாக குரல்கள் அவர்களின் உழைப்பிற்கு பலனாக இருக்கும். ஒரு தரமான தமிழ் திரைப்படத்தினை உலகளாவிய ரசிகர்களுக்கு அளிப்பதில் YNot Studios பெருமை கொள்கிறது. Netflix நிறுவனம் 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” படத்தினை அவர்கள் அனைவரும் கண்டுக் களிக்கலாம்.
Netflix India அலுவல் அதிகாரி பிரதிக்ஷா ராவ் கூறியதாவது…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜகமே தந்திரம்” படத்தினை எங்கள் நிறுவனத்தில் வெளியிடுவது பெரும் மகிழ்ச்சி. உலகம் முழுக்க உள்ள ரசிகர்களுக்கு சிறந்ததொரு தமிழ் படத்தினை கொண்டு செல்வதில் பெரும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் உள்ளோம். தனுஷ் நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ள இப்படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுக்க ரசிகர்களுக்கு கொண்டுசெல்வது பெருமை.
இப்படத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
About Netflix:
Netflix is the world’s leading streaming entertainment service with 204 million paid memberships in over 190 countries enjoying TV series, documentaries and feature films across a wide variety of genres and languages. Members can watch as much as they want, anytime, anywhere, on any internet-connected screen. Members can play, pause and resume watching, all without commercials or commitments.
For the latest news, updates and entertainment from Netflix India, follow us on IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia
About YNOT Studios:
YNOT Studios is a film production company in Chennai, India, also established by producer S. Sashikanth in 2009 and has produced 13 feature films as of 2019, which includes productions made in the Tamil, Telugu, Malayalam and Hindi film industries of India and of which Vikram Vedha (2017) directed by Pushkar & Gayatri – their biggest hit, is being made in three different languages apart from their latest release Game Over (2019) in Tamil, Telugu & Hindi. Their upcoming releases are Jagame Thandhiram, Mandela & Aelay.
Key People : S Sashikanth
YNotStudios
@studiosynot /studiosynot
About Reliance Entertainment:
Reliance Entertainment is the media and entertainment arm of Reliance Group and is engaged in the creation and distribution of content across film, television, digital and gaming platforms. Internationally, Reliance Entertainment has partnered since 2009 with iconic film producer and director, Steven Spielberg, in the formation of DreamWorks Studios, and thereafter, Amblin Partners. This relationship has produced several successful films such as The Help, War Horse, Lincoln, The Hundred Foot Journey, The Girl on the Train, A Dog’s Purpose, Bridge of Spies, The Post, 2019 Golden Globes and Oscar winning film, Green Book & 2020 Academy Award nominee and Golden Globes winner 1917.
Key People : Shibasish Sarkar
RelianceEntertainment
@RelianceEnt /reliance.entertainment
Media Contacts:
Neha Kaul: [email protected]
Trishla Shah: [email protected]
Madhavi Srinivas: [email protected]











