நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் OTT இனையத்தில் ரிலீசாகிறதா? இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் OTT இனையத்தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அச்சுறுத்தலால் திரையரங்குகள் 100 நாட்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளதால்.
திரைக்கு வர தயாராக உள்ள புதிய திரைப்படங்களை திரையரங்கு அதிபர்கள் எதிர்ப்பை மீறி நேரடியாக இணையத்தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் தயாராகி வருகிறார்கள்.
நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் நடிகை கீர்த்தி சுரேசின் பெண்குயின் திரைப்படங்கள் OTT இனையத்தளத்தில் வெளிவந்தன.
அடுத்து மேலும் பல திரைப்படங்கள் OTT இனையத்தளத்தில் வெளியாக தயாராகி வருகின்றன.
இதை அடுத்து நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை OTT இனையத்தளத்தில் வெளியிட செய்ய முயற்சிகள் நடப்பதாகவும்,
நடிகர் தனுசும் தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கிடைக்குமானால் OTT இணைய தளத்தில் தாராளமாக ரிலீஸ் செய்யலாம் என்று ஒப்புதல் அளித்து விட்டதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில், அந்த திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் தியேட்டரில் மட்டுமேதான் வெளியாகும் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த ஜெகமே தந்திரம்
திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.











