என்னை அம்மாவா பாத்திங்கன்னா என் இதயத்தில் இடம் இருக்கும், என்னை வெறும் பொம்பளையா பார்த்தீங்கன்னா.. “தலைவி” டிரைலர்..!

சென்னை 23 மார்ச் 2021

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அரவிந்தசாமி, கங்கனா ரனாவத் நடிப்பில் “தலைவி” ஏப்ரல் மாதம் 23 ஆம தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

தலைவி’ மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை உலகம் அறிய செய்யும் திரைப்படம்தான் “தலைவி”.

இந்த தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா வாழ்க்கையில் வரலாற்றில் ஒரு நடிகையாக ஒரு கட்சி தலைவியாக அவர் எதிர்கொண்ட  பல சம்பவங்கள் இந்த திரைப்படத்தில் இருக்கிறது என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக டிரைலரின் முடிவில் ’என்னை அம்மாவா பாத்திங்கன்னா என் இதயத்தில் இடம் இருக்கும், என்னை வெறும் பொம்பளையா பார்த்தீங்கன்னா…. என்று கூறுவதுடன் இந்த ட்ரெய்லர் முடிவுக்கு வருகிறது.

மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது இந்த திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை மேலும் கூட்டுகிறது.

ஜி வி பிரகாஷ் குமார் இசையில் உருவாகிய ‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி முன்று மொழிகளில்
என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!