நடிகர் அசோக் செல்வன் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை 24 ஏப்ரல் 2021

அசோக் செல்வன் ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஹாஸ்டல்.

இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர், மற்றும் நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாஸ்டல் இந்தப் திரைப்படம் மலையாளத்தில் ’அடி கப்பியரே கூட்டமணி’ என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அந்தப் திரைப்படத்தை தான் தமிழில் ஹாஸ்டல் எனற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன், இசையமைப்பாளராக போபோ சசி, எடிட்டர் ராகு, கலை இயக்குநராக துரைராஜ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!