விக்ரம் 2 திரைப்படத்தில் உலக நாயகனுக்கு மக்கள் செல்வன் வில்லனா.?
சென்னை 19 மே 2021
விக்ரம் 2 திரைப்படத்தில் உலக நாயகனுக்கு மக்கள் செல்வன் வில்லனா.?
நடிகர் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்-2’ திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக வில்லனாக நடிப்பதற்கு நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இது குறித்து நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னர் கூறுகையில்..
“விக்ரம்-2′ திரைப்படத்துக்காக இயக்குநர் தரப்பில் என்னை அணுகியது உண்மைதான்.
அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் அது இன்னமும் உறுதியாகததால் அந்த திரைப்படத்திற்கு இதுவரையிலும் நான் தேதிகளை ஒதுக்கவில்லை.
‘விக்ரம்-2’ திரைப்படத்தில் நான் வில்லனாக நடிப்பதற்கு ஏதேனும் சிறப்பான விஷயங்கள் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அந்தப் திரைப்படத்தில் நடிப்பதில் அர்த்தம் இல்லை…” என்றே கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதே ‘விக்ரம்-2’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக உறுதியானத் தகவல்கள் கிடைத்தன.
நடிகர் பகத் பாசிலும் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவருடன் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தை நடிக்க உள்ளார்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











