நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா.? அதுவும் நடிப்பு தானா.? நெட்டிசன்ஸ் நெத்தியடி கேள்விக்கு….?

சென்னை 19 மே 2021

நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா.? அதுவும் நடிப்பு தானா.? நெட்டிசன்ஸ் நெத்தியடி கேள்விக்கு…?

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் கோவிஷீல்டு / கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒரு தனியார் குமரன் மருத்துவமனையில் நடிகை நயன்தாரா & அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் கொரோனா வைரஸ் நோய் தொற்றுகான தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த புஙைப்படங்கள் நேற்று இணையத்தளத்தில் வைரலானது.

இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன் புகைப்படத்தில் தடுப்பூசி இருப்பது தெரிகிறது.

ஆனால் நடிகை நயன்தாரா புகைப்படத்தில் தடுப்பூசியை காணவில்லை.

நர்ஸ் தனது விரல்களை வைத்து தடுப்பூசி போடுவது போல ‘போஸ்’ கொடுப்பதாக தெரிகிறது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி விட்டது.

இதற்கு நடிகை நயன்தாரா விளக்கம் கொடுப்பாரா? அல்லது வழக்கம்போல விக்கி விளக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

error: Content is protected !!