உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் -கன்னிகா திருமணம் இயக்குநர் பாரதிராஜா அமீர் நேரில் வாழ்த்து.
சென்னை 30 ஜூலை 2021
உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் -கன்னிகா திருமணம் இயக்குநர் பாரதிராஜா அமீர் நேரில் வாழ்த்து.
பிரபல பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.
அப்போதே உலக நாயகன் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் இணைந்தார்.
இவர் உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் இந்த தனது திருமணம் நடைபெற இருப்பதாக சினேகன் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று ஜூலை 29-ஆம் தேதி காலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் கவிஞர் சினேகன் -கன்னிகா ரவி திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஞானசம்பந்தன், இயக்குநர் அமீர் நக்கீரன் கோபால் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்தினர்.
விருதுநகர் அருகே உள்ள அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நடிகை கன்னிகா ரவி.
இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி அதுல்யா நடித்த ’அடுத்த சாட்டை’ உள்பட ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார்.
டிவி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் சமூக வலைத்தளங்களில் தான் பயின்ற சிலம்பாட்ட வீடியோக்களை பதிவிடுவார்.
இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.











