“நவரசா” ஆந்தாலஜி படத்தில் “துணிந்த பின்” பகுதியை இயக்கியது, சிறந்ததொரு அனுபவம் – இயக்குநர் சர்ஜுன் KM !
சென்னை 30 ஜூலை 2021
“நவரசா” ஆந்தாலஜி படத்தில் “துணிந்த பின்” பகுதியை இயக்கியது, சிறந்ததொரு அனுபவம் – இயக்குநர் சர்ஜுன் KM !
தனது குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம், அனைத்து தரப்பினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் சர்ஜுன் KM, விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் “துணிந்த பின்” பகுதியினை இயக்கியுள்ளார்.
தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.
“துணிந்த பின்” பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் சர்ஜுன் KM கூறியதாவது…
இப்படத்தின் தயாரிப்பு குழுவும், நடிகர்கள் குழுவும் படப்பிடிப்பிற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள்.
அவர்களின் உதவி இல்லாமல் இத்தனை எளிதாக “துணிந்த பின்” பகுதியினை படம்பிடித்திருக்க முடியாது.
படத்தின் மொத்த படப்பிடிப்பும், தென்காசி அருகிலுள்ள அச்சன் கோவிலில், மழை தூறும் மலைப்பகுதியில் நடந்தது.
படப்பிடிப்பு தளமே குழுவினர் அனைருக்கும் மிகப்பெரும் உற்சாகத்தை தருவதாக அமைந்திருந்தது.
மொத்த படப்பிடிப்பையும் 5 நாட்களில் முடித்து, விட்டுப்போன காட்சிகளை ஒரு நாளில் எடுத்து முடித்து விட்டோம்.
இப்படம் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார்.
“நவரசா” மனித உணர்வுளில் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு, ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாகும். தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, “நவரசா” உருவாகியுள்ளது.
Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
“நவரசா” Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்











