“நவரசா” திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி உடன் பணியாற்றியது, மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம் – இயக்குநர் கார்த்திக் நரேன் !

சென்னை 30 ஜூலை 2021 “நவரசா” திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி உடன் பணியாற்றியது, மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம் – இயக்குநர் கார்த்திக் நரேன் !

சிறந்த குறும்படங்கள் மூலம் விருதுகளை வென்று, திரைத்துறையில் நுழைந்து கவனம் ஈர்த்த, இயக்குநர் கார்த்திக் நரேன், விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் “புராஜக்ட் அக்னி” பகுதியினை இயக்கியுள்ளார்.

தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

“புராஜக்ட் அக்னி” பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் பகிர்ந்துகொண்டதாவது…

“நவரசா’ படத்தை பொறுத்தவரை, அதன் அத்தனை அம்சங்களுமே எனக்கு மிகப்பெரும் பாடத்தை கற்றுத்தந்த பெரிய பயணம் ஆகும். சயின்ஸ் பிக்சன் வகையில், ஒரு புதுமையான கனவு முயற்சி தான் இப்படம். இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் தயாரிக்கும் வேலைகளை ஒழுங்குபடுத்தியவுடன், முதலில் நான் அரவிந்த் சாமி மற்றும் பிரசன்னா ஆகிய இருவரைத் தான் தொடர்பு கொண்டேன்.

இவர்கள் இருவருடனும் ஏற்கனவே நான் பணிபுரிந்துள்ளேன்.

அரவிந்த சாமி அவர்களை பொறுத்தவரை அவர் படப்பிடிப்பில் காட்சியை தனது நடிப்பின் மூலம் நிறைய மேம்படுத்துவார்.

கதாப்பாத்திரங்களை சரியாக வெளிப்படுத்தும் பொருட்டு, அரவிந்த் சாமி, பிரசன்னா மற்றும் பூர்ணா ஆகியோர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டனர்.

அனைத்து நடிகர்களும் இத்திரைக்கதையில் அழகாக பொருந்தியுள்ளார்கள்.

இதனால் படம் மிக அற்புதமாக வந்துள்ளது என்றார்.

மனித உணர்வுளின் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாக தமிழின் முதன்மை கலைஞர்கள் உருவாக்கத்தில் “நவரசா” உருவாகியுள்ளது.

Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

“நவரசா” Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.