“என் உடலை சுமக்க முடியாமல் நடந்து அலைந்து கொண்டிருந்த அன்று உயிர் சுமந்து காற்றில் நடந்து வீடு வந்தேன்.” இயக்குநர் தாமிரா அவர்களின் நினைவஞ்சலிக்காக, இயக்குநர் சீனு ராமசாமி.
“என் உடலை சுமக்க முடியாமல் நடந்து அலைந்து கொண்டிருந்த அன்று உயிர் சுமந்து காற்றில் நடந்து வீடு வந்தேன்.” இயக்குநர் தாமிரா அவர்களின் நினைவஞ்சலிக்காக,இயக்குநர் சீனு ராமசாமி.
அனைவருக்கும் வணக்கம்!
கொரோனா காலத்திற்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் வேண்டும் என்றார். என் மீது மையல் கொண்டு என்னிடம் வந்து சேர முயன்ற இளைஞன் ஒச்சுமாயியை அனுப்பினேன்.
ஆனால் இதய தசைகள் கிழிபட, தாமிரா சார் நம்மை விட்டுட்டு போய்ட்டார் சார் என்று அலைபேசியில் அழுதான்.
அன்று முழுவதும் அமைதியாக இருந்தேன். அவர் அட்மிட் ஆகியிருந்த ஆஸ்பத்திரியின் வாசலை இப்பவும் கடக்க நேர்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை நினைக்கும் என் மனம்.
சீனு உங்ககிட்ட இருக்கிற கவிதை உணர்ச்சி… அது ஸ்கீரின் பிளேல்ல வருது.. அது இருக்கிற வரைக்கும் உங்களுக்கு தோல்வி இல்ல..
சரிங்க சார் என்று மட்டும் சொன்னேன். என் உடலை சுமக்க முடியாமல் நடந்து அலைந்து கொண்டிருந்த அன்று உயிர் சுமந்து காற்றில் நடந்து வீடு வந்தேன்.
பிறந்து மூணு மாதம் ஆன என் மூத்த மகளின் அருகே படுத்து நிம்மதியாக தூங்கினேன்.
இதுதான், இயக்குனர் தாமிரா அவர் நேசித்த தாமிரபரணி ஆறும் அப்படியானது தான்.
இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாக பார்த்தது 1997ம் ஆண்டு அண்ணன் சீமான் அவர்களின் சாலிகிராம வீட்டில். ஒரு எழுத்தாளராக அறிமுகமானார் .
நானும் இலக்கிய ஆர்வமுடையவனாக தென்பட்டதால் அவரும் என் அருகாமையை விரும்பினார்.
பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவருடன் பயணித்திருக்கிறன். அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இரவு பகலாக உழைப்பதை நான் ஆச்சர்யமாக கவனித்திருக்கிறேன்.
எப்போதும் எளிமையாகவும் அன்பான மனிதராகவும் அவர் இருந்தார்
அவர் பெற்ற குழந்தைகளை சிறுவயதில் வடபழநி வீட்டில் என்னுடைய பெண்டக்ஸ் கே 1000 கேமராவால் படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறேன்.
தன்னம்பிக்கையாளர்.
எப்போதும் தனக்கு வேலை தந்தபடி இருப்பார்.
என் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
புகைப்பவர்களுக்கு தெரியும் அந்த உறுதி எத்தகையதென்று.
முதல் சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் இயக்குனர் தாமிரா.. தாமீரா ஒரு நல்ல ஆன்மா. தன் தந்தையை பெருமையாக
கொண்டாடியவர்.
வசந்தகால மரத்தை வேரோடு பிடிங்கிய மாதிரி அவரை காலம் எடுத்து சென்று விட்டது.
என் படப்பிடிப்புக்கு அவர் தந்தையோடு வந்து மகிழ்ந்த அந்நாளின் திருவிழாவை எப்போதும் மறவேன்.
நீங்கள் நடந்து பாதங்களால் உருவாக்கிய நல்லுணர்வுமிக்க ஒற்றையடிப்பாதையில் உங்கள் சந்ததிகள் வளர்க!
தன் விவசாய நிலத்தில் காலூன்றி நிற்கும் உங்கள் தந்தை வாழ்க.. வாழ்க வாழ்க அன்புமிகுந்த தோழரே நீர் வாழ்க…
நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்கள் அலைபேசியை எடுக்க காத்திருப்பேன்..
சீனு ராமசாமி.
(இயக்குனர் தாமிரா அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்திற்கு கலந்து கொள்ள முடியவில்லை ஆகையால் இக்கடிதத்தை அனுப்பினேன்)
Related posts:
மறைந்த இயக்குனர் தாமிரா அவர்களுக்கு இயக்குனர் சீனு ராமசாமி நினைவஞ்சலி செய்தி..!
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் பூஜையுடன் துவங்கியது !
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்க, Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படம், “Production No.2” !
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் படபிடிப்பு தளத்தில் விஜய்சேதுபதி!!! வைரலாகும் புகைப்படம்.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.!
இளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்.
இயக்குனர் தாமிரா விற்காக நடிகர் ஆரி அர்ஜுனனின் இரங்கல்…
கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகாவிற்கும் திருமணம் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வருகிற 29-07- 2021 வியாழன் அன்று திருமணம் நடைபெற உள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் நாயகனாக மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்!!!
நடிகர் மயில்சாமி இறுதியாக feb 16 அன்று வரை நடித்த விளம்பரம் குறும்பட இயக்குநர் ராகுலின் அஞ்சலி.!

