30 வருடங்களுக்கு பிறகு, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம் படத்தில் மீண்டும் அமலா.
சென்னை 28 செப்டம்பர் 2021
30 வருடங்களுக்கு பிறகு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் கணம் படத்தில் மீண்டும் நடிகை அமலா.
30 வருடங்களுக்கு பிறகு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் கணம் படத்தில் மீண்டும் நடிகை அமலா.
தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். 1991-ல் கற்பூர முல்லை படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். 30 வருடங்களுக்கு பிறகு தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் #கணம் படத்தில் அமலா தமிழில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் #கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் ஷர்வானந்த் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார். தயாரிப்பு S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு.
Related posts:
கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகிற்கு வரும் நடிகர் ஷர்வானந்த்!
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் 30வது படம் சமந்தா நடிக்கும் ரொமான்டிக் ஃபேண்டஸி திரைப்படம் !
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அம்மா.. பாடல். ஹிட் ஆன ‘கணம்’ படத்தின் ஆன்மாவான ‘அம்மா’ பாடல்!
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை விஜயசாந்தி
22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !
37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்உருவாகும் k.பாக்யராஜ் ன் ” முந்தானை முடிச்சு ” சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.
கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில், உருவாகும் “Production No.4” படத்தில், நடிகர்கள் K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள் !
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி A.வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி”
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பம்.
15 வருடங்களுக்கு பிறகு ஊர்வசி-கலாரஞ்சனி சகோதரிகள் மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘யோசி’ திரைப்படம் (ஏப்-7) நாளை வெளியாகிறது.!

