விநோதய சித்தம் திரை விமர்சனம். ரேட்டிங் –4 /5

நடிகர் நடிகைகள் – சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, முனிஸ்காநத், திபக், ஜெய பிரகாஷ், பாலாஜி மோகன், நமோ நாராயணா, ஷெர்லினா, ஹரிகிருஷ்ணன், அசோக்,
மற்றும் பலர்.
தயாரிப்பு – அபிராமி மீடியா ஒர்க்ஸ்.
இயக்கம் – சமுத்திரகனி
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
படத்தொகுப்பு – எ.எல். ரமேஷ்.
இசை – சத்யா சி
திரைப்படம் ஒடிடியில் வெளியான தேதி – 13 அக்டோபர் 2021
ரேட்டிங் –4 /5
தமிழ் திரைப்பட உலகில் இப்படி ஒரு திரைப்படமா என வியக்க வைக்கும் வகையில் ஒரு திரைப்படமாக இந்த வினோதய சித்தம் அமைந்திருக்கிறது.
இந்த வினோதய சித்தம் திரைப் படத்திற்கு அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவில் மிக அருமையாக திரைப் படத்தை எடுத்து கொடுத்துள்ளார் இயக்குநர் சமுத்திரக்கனி.
அதிக வயதான கதாபாத்திரங்களை கதாநாயகனாகக் கொண்ட திரைப்படங்களை இங்கு தமிழ் திரைப்பட உலகில் பார்ப்பதும் மிக மிக அரிது.
இந்த திரைப்படம் நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் 14 ஆம் தேதி அன்று வெளியாகியுள்ளது.
பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் நடிகர் தம்பி ராமையா உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
எந்நேரமும் ஆபிஸ் ஞாபகத்தில் குடும்பத்தில் உள்ள நபர்கள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை.
அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி சிடு சிடுவென இருக்கிறார்.
எந்த வேலைக்கும் நேரமில்லை என்று அவசர கதியில் இருக்கிறார்.
தம்பி ராமையாவின் 25-வது திருமண நாளை கொண்டாட குடும்பத்தினர் அனைவரும் தயாராகி வருகின்றனர்.
அந்த சமயத்தில் அவருக்கு அலுவலகத்தில் அவசர வேலை ஒன்று வருகிறது.
இதற்காக வெளியூர் செல்லும் அவர், வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது விமானத்தை தவறவிடுகிறார்
வெளியூர் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பும்போது சாலை விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார்.
அந்த நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் சமுத்திரகனி.
தம்பி ராமையாவின் ஆன்மாவை அழைத்து செல்ல நேரம் சமுத்திரக்கனி வடிவில் வருகிறது.
அவர் தன்னை சமுத்திரகனி ஆன்மாவை அழைத்து செல்ல வந்திருக்கிறேன் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
உடன் செல்ல மறுக்கும் ஆன்மா அவரிடம் கெஞ்சி கேட்டு 90 நாட்களுக்கு உயிருடன் இருக்கவும் அதற்குள் தனது மகள்கள், மகனுக்கு திருமணம் செய்துவிட்டு உடன் வருவதாக சமுத்திரக்கனிக்கு வாக்கு தருகிறார்.
சமுத்திரக்கனி தம்பி ராமையாவுக்கு அனுமதி தருகிறார்.
தம்பி ராமையா நினைத்தபடி எல்லாம் நடக்கிறதா? இல்லையா ? என்பதுதான் இந்த வினோதய சித்தம் திரைப்படத்தின் மீதிக் கதை.
சமுத்திரகனி, தம்பி ராமையா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
தம்பி ராமையா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தம்பி ராமையாதான் இந்தப் திரைப்படத்தின் கதையின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
தேசிய விருது பெற்ற நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த பரசுராமன் கதாபாத்திரம் மூலம் நிரூபித்திருக்கிறார்.
இந்த வினோதய சித்தம்
திரைப்படத்திற்காகவும் அவருக்கு தேசிய விருதை தாராளமாகப் பரிந்துரைக்கலாம்.
ஒரு கர்வம், மிடுக்கு, தான்தான் என்ற அகங்காரம் என தம்பி ராமையா நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
வழக்கமாக புரட்சிகரமான வசனங்களை பேசும் சமுத்திரகனி இந்த திரைப்படத்தில் வாழ்க்கையின் நிதர்சனங்களை சொல்லி ஸ்கோர் செய்து இருக்கிறார்.
தம்பி ராமையாவின் மகனாக தீபக், மகளாக சஞ்சிதா ஷெட்டி, நண்பனாக முனிஷ்காந்த் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
தம்பி ராமையாவின் மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனி. இப்படியெல்லாம் ஒரு தாய் இருந்தால் பிள்ளைகளுக்கு வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
இவர்களை தவிர ஷெர்லினா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது வசனம் தான். ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி ஆகிய மூவரும் வசனம் எழுதி உள்ளனர்.
திரைப்படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் ஷார்ப்பாக அமைந்துள்ளது.
நறுக்கென்று வசனங்கள், எழுதியவர்களுக்கு தனி பாராட்டுக்கள்.
திரைக்கதையையும் திறம்பட கையாண்டிருக்கிறார்கள்.
காமெடிகள் அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி இருப்பது திரைப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது.
திரைப்படத்தின் திரைக்கதைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பாடல்கள் இன்றி திரைப்படத்தை எடுத்துள்ள விதம் அருமை.
திரைப்படத்தில் பாடல்கள் இல்லாததால், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.
பின்னணி இசை வேறு ஒரு தளத்திற்கு திரைப்படத்தை அழைத்துச் செல்கிறது.
என்.கே ஏகாம்பரம் செய்திருக்கும் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு மிக பெரும் பலமாக அமைந்துள்ளது.
இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்து திரைப்படமாக்க தனி தைரியம் வேண்டும்.
அது சமுத்திரக்கனியிடம் நிறையவே இருக்கிறது, தெள்ளத்தெளிவாகவும் இருக்கிறது.
காதல் காட்சிகள், காமெடி, சண்டை, குத்துப்பாட்டுக்ள, உள்ள பல்வேறு திரைப்படங்களை பார்த்துப் பழகிப் போன தமிழ் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்களுக்கு இந்த வினோதய சித்தம் திரைப்படம் நிச்சயம் ஒரு மாறுபட்ட ரசனையைக் கொடுக்கும்.
பேசுவதை குறைத்துக் கொண்டதோடு வாழ்க்கையின் பல அர்த்தங்களை இந்த வினோதய சித்தம்
திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்குப் புரிய வைக்கிறார்.
இந்த வினோதய சித்தம் திரைப்படம் பார்க்கும் பொழுது மனதளவில் திரைப்படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு மாற்றம் வரும்
மொத்தத்தில் ‘விநோதய சித்தம்’ ஒவ்வொரு ரசிகனும் கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.











