சூ மந்திரகாளி திரை விமர்சனம் ரேட்டிங் –2.75 /5

நடிகர் நடிகைகள் – கார்த்திகேயன் வேலு, சஞ்சனா பர்லி, கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், வி.ஸ்ரீதர், சிங்காரவேலன், மேட்டூர் சேகர், வெங்கடேஷ் பாபு, மு.கா.சின்னண்ணன், மரகதம் சிவப்பிரகாசம், நிரஞ்சனா, தனன்யா, மைதிலி, மற்றும் பலர்.
தயாரிப்பு – அன்னம் மீடியாஸ்.
இயக்கம் – ஈஸ்வர் கொற்றவை.
ஒளிப்பதிவு – முகமது ஃபர்ஹான்.
படத்தொகுப்பு – கோகுல்.
இசை – சதீஷ் ரகுநாதன்.
நவிப் முருகன்.
திரைப்படம் வெளியான தேதி – 24 செப்டம்பர் 2021
ரேட்டிங் –2.75 /5
தமிழ் திரைப்பட உலகில் உள்ள பெரிய நடிகர் நடிகைகளை நம்பாமல் தன்னிடமுள்ள கதை மட்டுமே நம்பி, புதுமுக நடிகர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று நாம் சொல்ல வரும் விஷயத்தை சரியாகச் சொல்ல முயற்சிப்போம் என சிலர் திரைப்படங்களைக் கொடுத்து கவனிக்கப்படுகிறார்கள்.
அப்படி அந்த வரிசையில் வந்துள்ள திரைப்படம்தான் சூ மந்திரக்காளி.
பங்காளியூர் என்ற கிராமத்தில் முழுவதும் பங்காளிகளாகவே வசிக்கிறார்கள்.
இரண்டு கிராமங்களை சுற்றியே கதை நடக்கின்றன.
ஒரு கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள்.
எல்லோரும் அண்ணன்-தம்பி உறவு முறை கொண்டவர்கள்.
இருப்பினும் பொறாமை குணம் கொண்டவர்கள்.
ஒருவருக்கொருவர் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.
தனது ஊரில் உள்ள அங்காளி பங்காளி மட்டுமே வாழ்ந்து வரும் அந்த ஊரில்
அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் வேண்டுமானாலும் செய்யும் தன்னுடைய ஊர் மக்களை திருத்த வேண்டும் என்ற முடிவில் மந்திரவாதியை கூட்டி வர மந்திர தந்திரம் நிறைந்த யாரும் நுழையாத ஒரு மலை கிராமத்திற்குள் தனது நண்பனை மனைவி வேஷமிட்ட இருவரும் மலை கிராமத்திற்குள்
நுழைகிறார்கள்.
மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த அந்த ஊருக்குள் இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து எப்படி தன் ஊருக்கு அழைத்து வருகிறான் என்பதே
சூ மந்திர காளி திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக கார்த்திகேயன் வேலு, புதுமுகம் தான் என்று தெரியாத அளவுக்கு நடித்து இருக்கிறார்.
மாந்திரீகம் தெரிந்த பெண்ணாக கதாநாயகி சஞ்சனா புர்லி அறிமுகமாகி இருக்கிறார்.
வசீகர முகம் நடிப்பிலும் பளிச்சிடுகிறார்.
மற்ற கதாபாத்திரங்களிலும் அசல் கிராமத்து ஜனங்களை நடிக்க வைத்து இருக்கிறார்கள்.
இந்த சூ மந்திரகாளி திரைப்படத்தின் இடைவேளை வரை மிகவும் கலகலப்பாக கதை சொன்ன இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை, இரண்டாவது பாதியில் இங்கிலீஷ் படங்களைப்போன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியை நாடியிருக்கிறார்.
இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை.
திரைப்படம் முழுக்க ஏராளமான புது முகங்கள் நடித்திருந்தாலும் அவர்களை திறம்பட கையாண்டுள்ளார்.
சதிஷ் ரகுநாதனின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவில் உள்ளது.
பின்னணி இசையில் நவிப் முருகன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
முகமது பர்ஹாணின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
அப்படியான சில பொறாமை பிடித்த கதாபாத்திரங்களை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள், எல்லாமே நிஜம்தான்.
திரைப்படத்தில் பாடல்களும், மேக்கிங்கும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்திருந்தால் அது இந்தப் படத்திற்கு பெரும் உதவியாக இருந்திருக்கும்.
ஏதாவது மந்திரம் போட்டாவது அதை சிறப்பாக செய்ய வைத்திருக்கலாம்.
இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று யோசிக்க வைக்கும் கற்பனையை மிஞ்சிய கதை.
அதனால், திரைப்படத்தில் லாஜிக் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் எல்லாம் எதுவும் இல்லை சிரிக்க சிரிக்க மேஜிக் மட்டுமே என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி விடுகிறார்கள் அதே வகையில் படம் முழுக்கவே சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் கலகலப்பாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் இந்த சூ மந்திர காளி திரைப்படத்தை பார்க்க நினைத்தால் இப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.











