ஆனந்தம் விளையாடும் வீடு திரை விமர்சனம் ரேட்டிங் –2 /5.

நடிகர் நடிகைகள் – கௌதம் கார்த்திக், சேரன், சரவணன், ஷிவாத்மிகா ராஜசேகர், ஜோமல்லூரி, விக்னேஷ், மௌனிகா, டேனியல் பாலாஜி, சௌந்தர்ராஜன், சிங்கம் புலி, சினேகன், மொட்டை ராஜேந்திரன், செல்லா, முனிஸ்ராஜ், vj கதிரவன், சூப்பர் குட் சுப்ரமணி, நமோ நாராயணன், வெண்பா, பிரியங்கா, சூசன், மதுமிதா, ஜானகி, பருத்திவீரன் சுஜாதா, நக்கலைட் தனம்,
மற்றும் பலர்.
இயக்கம் – நந்தா பெரியசாமி.
ஒளிப்பதிவு – பொர்ரா பாலபரணி
படத்தொகுப்பு – N.B. ஸ்ரீகாந்த்.
இசை– சித்து குமார்,
தயாரிப்பு –ஸ்ரீவாரி பிலிம்.
ரேட்டிங் –2 /5
இயக்குனர் நந்தா பெரியசாமி ஒரு பெரிய குடும்பத்தின் கூட்டுக் குடும்பமாக வாழ வைக்க வேண்டும் என்று
பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாகக் கொடுக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
குடும்பப் பாங்கான கதைகளுக்கு தமிழ் திரைப்பட உலகில் பஞ்சமாகிவிட்ட நிலையில் அண்ணன், தம்பி நடக்கும் பாசக்கதையாக வந்திருக்கும் திரைப்படம்தான் “ஆனந்தம் விளையாடும் வீடு”.
இந்த திரைப்படத்தில் காட்டப்படும் பாசமும், போராட்டமும் பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
திண்டுக்கல் அருகில் வசிக்கும் ஜோ மல்லூரிக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்.
ஜோ மல்லூரியின் முதல் மனைவிக்கு பிறந்தது சரவணன், விக்னேஷ், சினேகன், என நான்கு மகன்கள் இருக்கிறார்கள்.
ஜோ மல்லூரியின்
இரண்டாவது மனைவிக்கு பிறந்தது சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்கள் இருக்கிறார்கள்.
சரவணனுக்கு கவுதம் கார்த்திக், வெண்பா என இரண்டு பிள்ளைகள்.
சேரன் தனது அண்ணன் சரவணன் மீது அதிக பாசத்துடன் இருக்கிறார்.
சரவணன் தனது மகள் வெண்பாவின் தலை பிரசவத்தில் பிறக்கும் குழந்தை தனது வீட்டில்தான் பிறக்க வேண்டும் என சரவணன் நினைக்கிறார்.
தனது அண்ணன சரவணனுக்கு வீடு கட்டுவதற்காக தனக்கு சொந்தமான இடத்தை கொடுத்து வீடு கட்டச் சொல்கிறார் சேரன்.
இதற்கு அண்ணன் சரவணன், வீடு கட்ட கொடுத்த இடம் உன்னுடையது வீடு கட்டும் மொத்த செலவு என்னுடையது என்று சேரனிடம் சரவணன் கூறி முடிவு செய்து மொத்த குடும்பமும் ஒன்றாக வாழ முடிவு செய்கிறார்கள்.
அண்ணன், தம்பிகள் என தனது ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக வசிக்க பெரிய வீட்டை கட்ட ஆரம்பிக்கிறார் அண்ணன் சரவணன்.
இந்த அண்ணன், தம்பிகளை பகை காரணமாக பிரிக்க நினைக்கிறார் வில்லன் டேனியல் பாலாஜி.
இந்த வீட்டை கட்டுவதற்கு குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் வருகிறது.
இறுதியில் பிரச்சனைகளை சமாளித்து அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தார்களா? இல்லையா? ஒன்றாகவே இருந்தார்களா? பிரிந்தார்களா ?
வீட்டை கட்டினார்களா? கட்ட வில்லையா? என்பதுதான் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் ஆகிய மூன்று பேரையும் திரைப்படத்தின் கதாநாயகர்கள் என்று சொல்ல வேண்டும்.
அப்பா சரவணன் பேச்சைத் தட்டாத பாசமான மகனாக கதாநாயகன் கவுதம் கார்த்திக்.
வாய்ப்பு கிடைக்கும் காட்சிகளில் பாசத்தை வெளிப்படுத்தும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் சரவணன்.
அன்பான, அதிர்ந்து கூட பேசாத அண்ணனாக சரவணன்.
ஒட்டு மொத்த குடும்பத்தையும் தனது ஒற்றைச் சொல்லால் நிர்வகிக்கிறார்.
இப்படி ஒரு அண்ணன் நமக்குக் கிடைக்க மாட்டாரா என ஏங்க வைத்திருக்கிறார்.
முழு கதையும் தாங்கி பிடித்து முவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
குறிப்பாக சேரனின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கப்பலம்.
சேரனுக்குத்தான் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
ஒரு பக்கம் பாசமான அண்ணன், மறுபக்கம் குடும்பத்தை பிரிக்கத் துடிக்கும் தம்பிகள்என பல்வேறு உணர்ச்சிகளை சாதாரணமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அடிக்கடி தகராறு செய்யும் மனைவி, பாசம் காட்டும் அண்ணன் மகன் கதாநாயகன் கவுதம் கார்த்திக் என கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்
கதாநாயகன் கவுதம் கார்த்திக் ஜோடியாக கதாநாயகி ஷிவாத்மிகா ராஜசேகர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
கதாநாயகி ஷிவாத்மிகா டாக்டர் ராஜசேகர் ஜீவிதா தம்பதிகளின் மகள் ஆவார்.
கதாநாயகி ஷிவாத்மிகா ராஜசேகர். குறைவான வாய்ப்புதான்.
இந்த திரைப்படத்திலும் அப்படியே தம்பிகளில் செல்லா, சவுந்தரராஜாவுக்கு பொறுப்பற்றவர்களாக நடிக்க நல்ல வாய்ப்பு, சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தம்பியாக நடித்திருக்கும் சவுந்தரராஜாவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மருமகள்களில் சூசனுக்கு மட்டுமே கொஞ்சம் மிரட்டலான காட்சிகள் இருக்கிறது.
மவுனிகா அன்பான அம்மாவாக நெகிழ வைக்கிறார்.
அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
வில்லனாக டேனியல் பாலாஜி வழக்கமான தன்னுடைய ஸ்டைலில் வழக்கமாக கண்களை உருட்டி வில்லத்தனம் செய்திருக்கிறார் டேனியல் பாலாஜி.
திரைப்படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நந்நா பெரிய சாமி.
மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.
குடும்பத்தின் பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்
இயக்குனர் நந்தா பெரியசாமி.
சித்துகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
குறிப்பாக சொந்தமுள்ள வாழ்க்கை என்ற பாடல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.
பாலபரணியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை எதார்த்தமாய் குடும்பத்தை அப்படியே யதார்த்தமாய்
பதிவு செய்துள்ளது.
இந்த திரைப்படத்தைப்
பார்க்கும் போது இதற்கு முன்பு தமிழ் திரைப்பட உலகில் பார்த்த ‘பாண்டவர் பூமி, கடைக்குட்டி சிங்கம்’ ஆனந்தம் ஆகிய சில திரைப்படங்கள் மட்டுமே ஞாபகம் வந்து போகிறது.
மொத்தத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் ஆனந்தம் மிக மிக குறைவுதான்.











