பிளட் மணி திரை விமர்சனம் ரேட்டிங் –2.75 /5.

நடிகர் நடிகைகள் – சிரிஷ், கிஷார், பிரியா பவானி சங்கர், அரவிந்த், ஸ்ரீலேகா ராஜேந்திரன், பஞ்சு சுப்பு
மற்றும் பலர்.

இயக்கம் – கேஎம் சர்ஜுன்.

ஒளிப்பதிவு –ஜி பாலமுருகன் DFT .

படத்தொகுப்பு – பிரசன்னா GK.

இசை – சதீஷ் ரகுநந்தன்

தயாரிப்பு – எம்பரர் என்டர்டெயின்மென்ட்

ரேட்டிங் –2.75 /5

அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்ற ஒருவர் அங்கு எதிர்கொள்ளும் துன்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு நிரைப்படமாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது ‘பிளட் மணி’.

இதற்கு முன்னரும் இதேபோன்ற சில திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருந்தாலும் அந்த திரைப்படங்களிலிருந்து இந்த திரைப்படம் எந்த வகையில் வேறுபட்டுள்ளது..

ஓடிடி தளங்களுக்காக பிரத்யேகமாக சில திரைப்படங்கள் தயாரிக்கும் போது அதை ஒரு திரைப்படம் போல பார்க்க வேண்டிய தாக்கத்தை அதன் இயக்குனர்கள் ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக ஓடிடி திரைப்படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என சுருக்கி விடுகிறார்களோ என்ற எண்ணத்தை இந்த ‘பிளட் மணி’ திரைப்படம் ஏற்படுத்துகிறது.

ஜீ 5 ஓடிடி தளத்தில் இதற்கு முன்பு வெளிவந்த சில ஓடிடி திரைப்படங்கள் கதையாகவோ அல்லது மேக்கிங் ஒரு ரசனையுடன் இருக்கும்.

இந்த ‘பிளட் மணி’யில் அவையனைத்தும் கதையிலும் பேக்கிங் அனைத்து விதத்திலும் மிஸ்ஸிங்.

தமிழகத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கிஷோர், அரவிந்த் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் செய்யாத ஒரு குற்றத்திற்காக குவைத் சிறைச்சாலை அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அண்ணன் தம்பி இருவருக்கும் தூக்கு தண்டனை என அறிவிக்கிறது குவைத்
நாட்டு அரசு.

ஆனாலும் கதாநாயகன் பிரியா பவானி சங்கர் அப்பாவி தமிழர்களான அண்ணன் தம்பி இருவரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என முடிவெடுக்கிறார்.

அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற செய்தி சேனல் ஒன்றில் புதிதாக உதவி செய்தி ஆசிரியராக பணிக்குச் சேர்ந்த கதாநாயகி பிரியா பவானி சங்கர் போராடுகிறார்.

இதற்கிடையே, ஊடகத்துறையில் செய்தியாளராக வேலை செய்யும் கதாநாயகி பிரியா பவானி சங்கருக்கு புரொமோஷன் கிடைக்க அவர் கிஷோர் விஷயத்தை கையிலெடுக்கிறார்.

இன்னும் முப்பது மணி நேரத்தில் தூக்கு என்று அறிவிக்கப்படும் சூழலில், அந்த அண்ணன் தம்பி இருவரையும் தூக்கு தண்டனையிலிருந்து கதாநாயகி பிரியா பவானி சங்கர் காப்பாற்றினாரா, இல்லையா? இந்த முயற்சியில் பிரியா வெற்றியடைந்தாரா? இல்லையா? அப்பாவி தமிழர்களின் உயிர் காப்பாற்றப்பட்டதா? இல்லையா? என்பதுதான் இநத ‘பிளட் மணி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

இநத பிளட் மணி திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் கதாநாயகி பிரியா பவானி சங்கர்.

ஒரு செய்தியைச் சொல்லி அலுவலகத்தில் அவமதிக்கும் நேரத்தில் இயல்பாக அருமையான நடிப்பை காட்டுகிறார்,

கிஷோரின் மகள் பேசுவதைக் கேட்டு உருகுவதும் இலங்கை மண்ணில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைத் தேடிப்போய் பேசுவதும் என்று தன் பணியை நிறைவாகவே செய்திருக்கிறார் கதாநாயகி பிரியா பவானி சங்கர்.

கதாநாயகி பிரியா பவானி சங்கர். நிஜ வாழ்க்கையில் நடிகையாவதற்கு நடிகை ஆவதற்கு முன்பு செய்தி வாசிப்பளராக பணியாற்றியதால் அந்த அனுபவத்தை இந்தக் கதாபாத்திர நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்

ஒரு பக்கம் சக பணியாளர்களின் கேலி பேச்சுக்கள், மறுபக்கம் செய்தி ஆசிரியரின் அழுத்தம் என பயணிக்கும் ஒரு கதாபாத்திரம். முடிந்தவரை இயல்பாக நடித்திருக்கிறார்.

மெட்ரோ திரைப்படத்தில நடித்த சிரிஷ் கதாநாயகி பிரியா பவானி சங்கருக்கு துணையாக இருக்கிறார்.

கதாநாயகி பிரியா பவானி சங்கருக்கு உதவி செய்யும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ஷிரிஷ் நடித்திருக்கிறார்.

இவருக்கு திரைப்படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை.

கிஷோரின் குவைத் வாழ்க்கையும் அவர் சிறை போராட்டமும் கலங்க வைக்கிறது.

கிஷோரின் தாய், குழந்தை கிராமத்து மனிதர்கள் என்று பலருடைய நடிப்பு சிறப்பு .

ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.

இசையமைப்பாளர் சதீஷ் ரகுநந்தன் பின்னணி இசை கதையின் மிகவும் பலம்.

பயணம்.., அந்தாண்ட ஆகாசம் பாடல்கள் மனதை கலங்கச்செய்கிறது.

குவைத்தில் தமிழர்களும் படும் கஷ்டங்களை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சர்ஜுன்.

சிறையிலிருக்கும் கிஷோர், அரவிந்த் இருவரும் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை ஆரம்பத்திலேயே காட்டியிருந்தால் அவர்கள் மீது நமக்கு அனுதாபம் வந்திருக்கும்.

அவர்கள் செய்யாத குற்றம் பற்றிய விவரத்தை பின்னர்தான் காட்டுகிறார்கள்.

அதுவே நிரைப்படத்தை உணர்வுபூர்வமாக ரசிக்க தடையாக இருக்கிறது.

ஒரு செய்தி சேனல் செட், ஒரு ஜெயில் செட் என இரண்டே இரண்டு செட்களில் மொத்த படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்கள்.

டிவி சீரியல்களுக்குக் கொஞ்சம் மேலாக, திரைப்படங்களுக்கு சற்று கீழாக என்ற தரத்தில் இந்தப் இந்த பிளட் மணி திரைப்படம்

மொத்தத்தில் ‘பிளட் மணி’ அதிக சப்தம் இல்லை.

error: Content is protected !!