சம்பள தொகை ஒழுங்காக வழங்காமல் மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் வயிற்றில் அடிக்கும் நியூஸ் தமிழ் நிர்வாகம்
சென்னை 17 மார்ச் 2022
சம்பள தொகை ஒழுங்காக வழங்காமல் மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் வயிற்றில் அடிக்கும் நியூஸ் தமிழ் நிர்வாகம்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புதியதாக துவங்கப்பட்ட செய்தி நிறுவனம் *நியூஸ் தமிழ் 24*7* இந்த செய்தி நிறுவனம் மாவட்டம் முழுவதும் செய்தியாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் குறிப்பிட்ட மாத சம்பளம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தியது.
ஒவ்வொரு மாதம் 5 ஆம் தேதி வழங்க வேண்டிய சம்பளம் 15 ஆம் தேதி ஆகியும் வழங்கப்படுவதில்லை.
ஒரு செய்தி தவறவிட்டால் அத்தனை கேள்வி கேட்கும் நிர்வாகம் தொழிலார்களுக்கு ஏன் சம்பளம் மட்டும் ஒழுங்காக வழங்க முடியவில்லை ? என்ற கேள்வி அனைத்து மாவட்ட செய்தியாளர்களுக்கும் எழுந்துள்ளது.
இரவு, பகல் பாராமல் கேட்கும் செய்திகளுக்கான காட்சிகளை எடுக்க இரு சக்கர வாகனத்தில் ஓடி, ஓடி உழைத்த ஒளிப்பதிவாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் மாத மாதம் மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக சம்பள பிரச்சினை உள்ளது.
உழைக்கும் பத்திரிகையாளர்கள் உழைப்பை நியூஸ் தமிழ் நிறுவனம் மதிப்பதில்லை.
ஆகவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் இதில் தலையிட்டு இதனை நம்பி இருக்கும் அத்தனை மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.











