தமிழ் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளது.
சென்னை 09 மார்ச் 2022
தமிழ் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிலம்பரசன் டிஆர் தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதம் செய்ததால்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
.
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிலம்பரசன் டிஆர் நடித்து 2016-ஆம் வருடம் வெளியான திரைப்படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு சிலம்பரசன் டிஆருக்கு ரூபாய் எட்டு கோடி சம்பளம் பேசப்பட்டு ரூபாய் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் முன் பணமாக இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் சம்பள பாக்கி ரூபாய் ஆறு கோடியே 48 லட்சம் சம்பள பாக்கி பெற்றுத்தரக் கோரி நடிகர் சிலம்பரசன் டிஆர், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
அதே சமயம், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இந்த திரைப்படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிலம்பரசன் டிஆரிடம் வசூலித்து தரக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, அவரிடம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிலம்பரசன் டிஆர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 1,080 நாட்கள் ஆகியும், வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.
இந்த அபராத தொகையை வரும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்











