மைசூரில் நடிகருடன் ஓட்டலில் தங்கிய நடிகை செருப்பால் அடிக்க பாய்த நடிகரின் மூன்றாவது மனைவி!

சென்னை 05 ஜூலை 2022 மைசூரில் நடிகருடன் ஓட்டலில் தங்கிய நடிகை செருப்பால் அடிக்க பாய்த நடிகரின் மூன்றாவது மனைவி!

தமிழ் திரைப்பட உலகில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர்.

இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட உலகில் உள்ள நடிகர் நரேஷ் பாபு காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் திரை உலகில் பரவி வருகிறது.

நடிகர் நரேஷ் பாபு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர்.
மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் நரேஷ் பாபு, பவித்ரா லோகேஷ் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தனி அறை எடுத்து தங்கி இருப்பதாக தகவல் அறிந்து அவர் தங்கி இருந்த அறையை ரம்யா ரகுபதி முற்றுகையிட்டு ரகளை செய்துள்ளார்.

ரம்யா ரகுபதி  அறை கதவை தட்டி கூச்சல் போட்டார்.

தகவல் அறிந்து மைசூர் காவல்துறை விரைந்து வந்து நடிகர் நரேஷ் பாபுவையும் நடிகை பவித்ரா லோகேஷ்யும் அறையில் இருந்து வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

அப்போது அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார்.

நடிகர் நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷ் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்த போது நடிகர் நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்தார்.

அதோடு நடிகை பவித்ரா லோகேஷ் பணத்துக்காக தனது கணவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ரம்யா ரகுபதி யின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பவித்ரா லோகேஷ், நான் நான்காவதாக திருமணம் செய்யவில்லை என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு இதுவரை விவாகரத்து நடைபெறவில்லை என்று கூறியுள்ள நடிகை பவித்ரா, லோகேஷ் தனக்கும் நடிகர் நரேஷ் பாபுக்கும் எனக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என கூறியுள்ளார்.

நடிகர் நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி தன் மீது வேண்டுமென்றே பழி போடுவதாகவும், தனக்கும் நடிகர் நரேஷ் பாபுக்கும் நான்கு ஆண்டுகளாக பழக்கம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தான் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும், இருவரும் சேர்ந்து 4, 5 திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது தனது சுசீந்திர பிரசாத்தை திருமணம் செய்யும் போது அவரிடம் பணம் இல்லை, வீடு இல்லை, கார் இல்லை, ஆனாலும் அவருடன் 11 வருடங்கள் வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி தேவையில்லாமல் அவரது குடும்ப பிரச்சனையில் என்னை இழுப்பதாகவும் இதுவரை ரம்யா ரகுபதியை நேரில் பார்த்தது கூட இல்லை என்றும் நடிகை பவித்ரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவரிடம் இருந்து தான் விவாகரத்து பெறுவது தன்னுடைய பிரச்சனை என்றும் அதை தானே பார்த்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவும் வதந்திகள் தொடர்பாக சைபர் கிரைம்மில் புகார் அளித்துள்ளதாகவும் நடிகை பவித்ரா லோகேஷ் தெரிவித்துள்ளார்

அவரை பிரிந்த பிறகும் தங்களுக்குள் கடந்த ஆறு ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ள நடிகை பவித்ரா லோகேஷ், நடிகர் நரேஷ் பாபுவின் அறிமுகம் கிடைக்கும் போது அவர் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றும் போதுதான் நரேஷ் பாபுவும் தானும சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் வீட்டில் யாரும் இல்லை அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் பவித்ரா லோகேஷ்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

error: Content is protected !!