நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சீதாராமம் ஐக்கிய அரபு நாடுகளில் இன்று முதல் வெளியாகிறது.!!!

சென்னை 11 ஆகஸ்ட் 2022  நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சீதாராமம் ஐக்கிய அரபு நாடுகளில் இன்று முதல் வெளியாகிறது.!!!

நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த சீதா ராமம் திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்குது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த சீதா ராமம் திரைப்படத்தை ஹனுராகவபுடி இயக்கியுள்ளார்.

1970களில் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாக இந்த திரைப்படம் மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டது.

பொதுவாகவே அரபு நாடுகளில் நடிகர் துல்கர் சல்மானின் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

அதே சமயம் சீதாராமம் என வைக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தின் தலைப்பு சென்சிட்டிவாக இருந்ததால் இந்த திரைப்படம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அங்கே உள்ள சென்சார் போர்டு இந்த சீதாராமம் திரைப்படத்தை வெளியிடலாம் என சான்றிதழ் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று (ஆக-11) முதல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சீதாராமம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!