நடிகர் உதயநிதிக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? – இயக்குனர் ஷங்கர் கொந்தளிப்பு!

சென்னை 11 ஆகஸ்ட் 2022 நடிகர் உதயநிதிக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? – இயக்குனர் ஷங்கர் கொந்தளிப்பு!

இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பல தடைகளைக் தாண்டி மீண்டும் இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பைப் பத்து நாட்கள் நடத்த அனுமதி கேட்டார்களாம்.

அங்கு அரசு அலுவல்கள் நடைபெறுவதால் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே அனுமதி என்ற விதிமுறையை கூறியிருக்கிறார்.

ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படப்பிடிப்பு விதிமுறையின் படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்றும் ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் திங்கட்கிழமையும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டும் அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதன்பின், கடும் முயற்சிகளுக்குப் பின் சிறப்பு அனுமதி பெற்று திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு நடந்ததாம்.

இதனால் இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து அவர்களுக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? என்று கேட்டதாகச் கேள்வி எழுப்பியதாகச் சொல்லப் படுகிறது.!

error: Content is protected !!