நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா விருமன்’ வெற்றியை மாலை அணிவித்த கொண்டாடிய விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்!
சென்னை 13 ஆகஸ்ட் 2022 நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா விருமன்’ வெற்றியை மாலை அணிவித்த கொண்டாடிய விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்!
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவுடன் வெளியான முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று தந்துள்ளது.
வெற்றிக் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.
மிக பெரிய எதிர்பார்ப்புவுடன வெளியான இந்த விருமன் திரைப்படம், வெளியிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் உற்சாகமடைந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், திரைப்படத்தின் கதாநாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா கூட்டணியில் உருவான ‘விருமன்’ வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.











