விருமன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மதுரையில் பிரம்மாண்டமான நடக்கிறது.!!!
சென்னை 03 ஆகஸ்ட் 2022 விருமன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மதுரையில் பிரம்மாண்டமான நடக்கிறது.!!!
நடிகர் கார்த்தி தற்போது விருமன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இதற்கு முன் கொம்பன் திரைப்படத்தில் கார்த்தி – முத்தையா இணைத்தார்கள்.
இந்த திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது விருமன் இந்த தரைப்படத்தை முத்தையா எழுதி இயக்கிய கிராமத்து மண் வாசனை உள்ள திரைப்படம்தான் விருமன்.
இந்த திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் இன்று 3ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் மற்றும் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்
நடிகர் கார்த்தி நடிக்கும் இந்த திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளளர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ராஜ்கிரண், சூரி மற்றும் பிரகாஷ் ராஜ் விருமன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிட்டு விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, 2D நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.
விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12, 2022 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது.