இயக்குனர் இமயம் பாரதிராஜா திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

சென்னை 20 ஆகஸ்ட் 2022 இயக்குனர் இமயம் பாரதிராஜா திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மிக சிறப்பாக நடித்திருந்ததாக பாராட்டுகள் குவித்து வருகிறார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த ராக்கி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்திலும் நடிப்பதாக இருந்து பின்னர் விலகினார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்திலும் நடிப்பதாக இருந்து பின்னர் விலகினார்.

இந்த நிலையில் இப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மதுரை விமான நிலையத்தில் அவர் மயக்கம் அடைந்ததாகவும், அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் இப்போது நலமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!