என்னை யாரும் தனிமை படுத்தவில்லை. நானேதான் என்னை தனிமை படுத்திக்கொண்டேன். இயக்குனர் இமயம் பாரதிராஜா!

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது

சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் இங்கிருந்து யாரும் வெளி மாவட்டங்களுக்கு சென்றாலும் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகின்றனர்.

திரைப்பட இயக்குநர் இயக்குனர் இமயம் பாரதிராஜா சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுருந்தார்.

அங்கு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால்  இங்கிருந்து தேனிக்கு சென்ற இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் அவரது உதவியாளர்கள் மூன்று பேர் தேனியில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்று  சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதாக அவகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று  அவது வீட்டில் அல்லிநகரம் நகராட்சி சார்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

அதில் அவர் கூறியதாவது தன்னை யாரும் தனிமைப் படுத்தவில்லை. மக்கள் நலன் கருதியே தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் தங்களுக்கு மூன்று முறை கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது.

இந்த தகவலை பற்றி இயக்குனர் இமயம் பாரதிராஜாவே அதில் அவர் யாரும் எங்களை தனிமை படுத்தவில்லை. நாங்களே எங்களை தனிமை படுத்திக்கொண்டோம் என்று கூறியுள்ளார்

எனது சகோதரி தேனியில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

அவரை காண்பதற்க்காகவே முறையாக அனுமதி பெற்று, ஒரு சீட்டு வாங்கி, நான் பல மாவட்டங்களை கடந்து வந்திருக்கிறேன்.

எனது சகோதரி அறுவை சிகிச்சையில் இருக்கிறார். எனது சகோதரியை பார்ப்பதற்கு தான் நான் தேனிக்கு வந்தேன்.

ஆகவே நாங்கள் மகிழ்ச்சியுடன் அடுத்தப் திரைப்படத்திற்கான வேலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்

error: Content is protected !!